Oct 7, 2012

வசூலில் சாதனை படைத்தார் ஒபாமா!

வசூலில் சாதனை படைத்தார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1
கோடியே 82 லட்சத்து 5 ஆயிரத்து 813 பேர், 181 பில்லியன் டாலர் நிதி அளித்தனர். அது, 947 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.தற்போது வரலாறு காணாத வகையில் கூடுதலாக 5 லட்சத்து 67 ஆயிரம் பேர் என 1 பில்லியன் டாலர் அளவுக்கு தேர்தல் நிதியாக ஒபாமாவின் பிசாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் மிட்ரோம்னி நிதி வசூல் குறித்த தகவல் இல்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...