Dec 27, 2012

2000 ஆண்டுகள் பழமையான தியேட்டர் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!


December 27, 2012  01:07 pm
2000 ஆண்டுகள் பழமையான தியேட்டர் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!இங்கிலாந்தில் ரோமானிய கலாச்சாரத்துடன் கூடிய பழமையான தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்திருந்ததை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சரித்திர முக்கியத்துவம் பெற்ற இந்த தியேட்டர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகின்றது.

பிரிட்டனில் உள்ள தொல்லியல் துறையில் பணிபுரியும் Dr Paul Wilkinson என்பவர், Faversham, Kent பகுதியில் தொல்லியல் துறை பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த பள்ளியின் பின்புறம் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இவரது மாணவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, மிகபெரிய தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இது பிரிட்டனிலே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தொன்மையான கட்டிடம் ஆகும். ரோமானிய கலாசாரத்துடன் வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த தியேட்டர், 12,000 மக்கள் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னாளில் ஏற்பட்ட நாகரீக தியேட்டர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளதாக அறிய முடிகிறது.

Dr Paul Wilkinson, செய்தியாளர்களிடம் தெரிவித்த போது... 

இதுபோன்ற ஒரு பழமையான தியேட்டர் இதுவரை பிரிட்டனில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தகைய ஒரு கட்டிடம் எனது தோட்டத்தில் கிடைத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, பிரிட்டன் நாட்டிற்கே ஒரு பெருமையாகும். தொல்லியல் துறை மூலமாக இந்த இடத்தை மேலும் ஆராய்ச்சி செய்ய தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...