Dec 27, 2012

அமெரிக்காவில் பனி புயல்; 7 பேர் பலி, 2000 விமான சேவை முடக்கம்

வியாழன், 27 டிசம்பர் 2012
FILE
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொடர் பனிபொழிவு மற்று சுழற்காற்றில் சிக்கி இதுவரை ஏழு பேர் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ி‌றிஸ்மஸ் ப‌ண்டிகையை தொடர்ந்து அமெரிக்காவின் மெக்ஸிக்கோ வளைகுடாவிலிருந்து கிரேட் லேக் வரை கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.

தாரை தாரையாக பனிகட்டிகள் வானிலிருந்து விழுவதால் நகரமே வெள்ளை போ‌ன்றவை போல காட்சியளிக்கிறது. கடுமையான தொடர் சுழற்காற்றில் சிக்கி இதுவரை ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

கடுமையான காற்று மற்றும் உறை பனியால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வான் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கியுள்ளன. பல இடங்களில் பனி‌க்கட்டிகள் விழுந்து வீட்டு கூறைகள், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.

மேலும் பனி‌ப்பொழிவுகள் தொடரும் எனவும், பெரிய அளவிலான பனி‌க்கட்டிகள் விழக்கூடும் என்பதால் மக்கள் சாலைகளில் நடமாட வேண்டாம் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...