Dec 27, 2012


நிகாரகுவா நாட்டில் எரிமலை வெடித்தது: கிராம மக்கள் வெளியேற்றம்மனாகுவா, டிச.27-

அமெரிக்க நாடான நிகாரகுவாவில் சினான்டெக்கா நகரம் அருகே சான் கிறிஸ்டோபல் என்ற இடத்தில் எரிமலை உள்ளது. அங்குள்ள மிகப்பெரிய எரிமலைகளில் இதுவும் ஒன்று.

இந்த நிலையில் அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து கரும்புகை வெளியாகி வானத்தில் பல நூறு மைல் சுற்றளவுக்கு படர்ந்துள்ளது. எனவே, நிகாரகுவாவில் மேற்கு பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் இருந்து வெளியாகும் வெப்பம் 2,500 மீட்டர் பரப்பரளவுக்கு தாக்குகிறது. எரிமலையை சுற்றி மக்கள் வசிக்கின்றனர். எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளியேறும் நிலை இருப்பதால் அதை சுற்றி 5 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 500 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பரில் இந்த எரிமலை வெடித்தது. இதில் பல கால்நடைகள் பலியாகின.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...