Aug 14, 2012

செவ்வாய் கிரகத்தில் தற்போது என்ன நேரம்? அறிந்து கொள்ளும் வகையில் புதிய Apps உருவாக்கம்





செவ்வாய் கிரகத்தில் தற்போது என்ன நேரம் என்பதை நாம் இங்கிருந்தே தெரிந்து கொள்ளும் வகையில், நாசா வழிவகை செய்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டியை அங்கு நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாசா நிறுவனத்தின் ஒருபிரிவான ‌கோட்டார்ட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் நிறுவனம், புதிதாக ஒரு ஆப்சை(Apps) உருவாக்கியுள்ளது.
இந்த ஆப்சை நமது கணனி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களில் நிறுவுவதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய
நேரத்தினை உடன‌டியாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ், லினக்ஸ், மேக் உள்ளிட்ட இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆப்ஸ், போயிங் போயிங் என்ற வெப் பிளாக் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...