Aug 14, 2012

நல்லூர் ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவ நேரத்தில் காவடிகளில் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற தடை



நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் மற்றும் தீர்த்த உற்சவ நேரத்தின் போது காவடிகளில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்கள் காலை 9 .00 மணிவரை ஆலயத்திற்குள் செல்ல யாழ் மாநகர சபை தடைசெய்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் 16 ஆம் திகதி தேர் உற்சவமும், 17ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 7 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்து 9 .00 மணிக்கு அவரோகணித்து ஆலயத்திற்குள் சென்ற பின்னர் மட்டும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற ஆலயத்திற்கு வரும் காவடிகள், தூக்குக் காவடிகள் பாற்செம்பு மற்றும் கரகங்கள் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவோர் தடையைத் தாண்டி உட்செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என மாநகர சபை அறிவித்துள்ளது.
தேர், தீர்த்தக் காலங்களில் பக்தர் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்ற காரணத்தினால் பக்தர்களின் இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஆலய நிர்வாகமும், மாநகர சபையும் இணைந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...