Aug 14, 2012

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே 'இன்பார்ம்' பண்ணுங்க... நாசாவுக்கு ஒபாமா கோரிக்கை!


 If You Find Martians Let Me Know Right Away Obama Nasa
Nasas Morpheus spacecraft explodes ...ர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம்
என்றும் வர்ணித்துள்ளார் ஒபாமா வர்ணித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒபாமா இடையில் அயோவா மாகாணத்தில் தரையிறங்கினார். அப்போது அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி கலிபோர்னியாவில் உள்ள நாசாவின், ஜெட் புரபல்சன் ஆய்வகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடினார். அப்போதுதான் இதைத் தெரிவித்தார் அவர்.
விஞ்ஞானிகளிடம் ஒபாமா பேசுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏதேனும் உயிரினம் இருப்பதை கியூரியாசிட்டி கண்டுபிடித்தால், அது குறித்த தகவல் கிடைத்தால் உடனே எனக்குச் சொல்லுங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அது மிகப் பெரிய கண்டுபிடிப்பாக, உலகுக்கு மிகப் பெரி செய்தியாக அமையும்.
எத்தனையோ பணிகளில் நான் பிசியாக இருக்கிறேன் என்றாலும், எனக்கு இந்த செய்திதான் மிகப் பெரிய விஷயமாக அமையும்.
கியூரியாசிட்டியின் செவ்வாய் தரையிறங்கல் மிகப் பெரிய விஷயம், மனதைக் கொள்ளை கொள்கிறது, மிகப் பெரிய திரில்லாக இருக்கிறது. செவ்வாயில் கியூரியாசிட்டி காலெடுத்து வைத்தது அமெரிக்க மக்களை மட்டுமல்ல உலகெங்கும் உள்ள மக்களை பரவசப்படுத்தியுள்ளது என்றார் ஒபாமா.
பேச்சின்போது, ஜெட் புரபல்சன் ஆய்வகத்தின் இயக்குநர் போபக் பெர்டோவ்ஸ்கியையும் கிண்டலடித்தார் ஒபாமா. போபக் வைத்துள்ளதைப் போன்ற ஹேர்ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அதே போல வைத்துக் கொள்ள நானும் விரும்பினேன். ஆனால் என்னுடைய குழுவினர் அதைத் தடுத்து விட்டார்கள் என்றார் சிரித்தபடி.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...