Aug 14, 2012

படுவேகமாக உருகிவரும் ஐஸ் பாறைகள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்



பருவ நிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள ஐஸ் பாறைகள் பெருமளவில் அதிவேகமாக தற்போது உருகி வருவது தெரியவந்துள்ளது.இந்நிலையில் பூமியின் பருவநிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கிரையோ சாட்-2 என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் அந்த விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் முன்பை விட அதிவேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு ஐஸ் கட்டிகளே இல்லாத நிலை ஏற்படும். அதாவது அங்கு முற்றிலும் ஐஸ் கட்டிகள் உருகி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...