Jan 9, 2013

புதிதாக 461 கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!

புதிதாக 461 கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!
[Wednesday, 2013-01-09
News Service புதிதாக 461 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா மையம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கெப்லர் என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் காமிரா விண்வெளியில் உள்ள புதிய கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
  
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் முதல் 2011 மார்ச் மாதம் வரை 461 புதிய கிரகங்களை கெப்லர் கண்டு பிடித்துள்ளது. இவற்றில் 4 கிரகங்கள் பூமியைவிட 2 மடங்கு சிறியதாக உள்ளன. இவை சூரிய மண்டலத்திற்குள் சுற்றி வருகின்றன. இவற்றின் மேல் பரப்பில் தீரவ வடிவில் தண்ணீர் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சமீபத்தில் கண்டறியப்ட்டுள்ள கிரகங்கள் உயிரினங்கள் வாழ தகுதியுடையவைகளாகவே உள்ளன.
இவை தவீர 1 லட்சத்து 50 ஆயிரம் புதிய நட்சத்திரங்களையும் கெப்லர் செயற்கை கோள் கண்டு பிடித்து போட்டோ எடுத்துள்ளது. இவை அதிக வெளிச்சத்துடன் திகழ்கின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...