Jan 9, 2013

வரலாறு காணாத வெப்பத்தில் தகிக்கிறது அவுஸ்ரேலியா - புல் புதர்கள் பற்றியெரிகின்றன!

News Service
[Wednesday, 2013-01-09
அவுஸ்ரேலியாவில் இன்று வரலாறு காணாத வெயில் அடித்ததால் ஆங்காங்கே புல் புதர்கள் தீ பற்றி எரிந்தன. இதனால் பல வீடுகளும் தீயில் எரிந்து நாசம் ஆகின. அவுஸ்ரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் அவசர நிலை பிரகடனபடுத்தப் பட்டுள்ளது. சிட்னி அமைத்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இன்றைய வெயில் 42.3யிஇ தொட்டது. இத்துடன் பலத்த அனல் கற்றும் வீசியதால் பல இடங்களில் உள்ள புல் புதர்கள் மள மள வென தீ பிடித்து எரிய தொடங்கின.
  
தீயுடன் பலத்த காற்று வீசியதால் தீ கட்டுகடங்காமல் 75 ஹெக்டர் தூரம் பரவின. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் இன்று மற்றும் 600 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு
வண்டிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீ அணைக்க போராடி வருகின்றன. இந்த தீயில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம் ஆகின. இன்னும் பல இடங்களில் இந்த தீ, சிறிய ஊர்களை சுற்றிலும் சூழ்ந்து எரித்து கொண்டு இருப்பதால் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வர இயலாமல் உள்ளனர்.
அதே நேரத்தில் இந்த தீயால் அவர்கள் வீடுகள் எரியும் அபாயம் உள்ளதால் பத்திரமாக வெளி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 130 இடங்களில் தீ கட்டுப்பாடின்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனல் தீ காற்றினால் மோட்டார் வேயில் சென்ற சில வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன. இன்றைய வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மக்கள் கூட்டம் கடற்கரைகளில் நிரம்பி வழிந்தன.
மிருக காட்சி சாலையில் விலங்குகளுக்கு குளிரூட்டப்பட்ட தண்ணீர் தொடர்ந்து பீச்சிஅடிக்கும் வண்ணம் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் மிருகங்களுக்கு நீருடன் பனிக்கட்டிகள் கொடுக்கப்பட்டன. மொத்தத்தில் இன்று ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெப்பத்தை கண்டது. அடுத்த வாரம் இதை விட மிக அதிக வெப்பம் தாக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...