Jan 9, 2013

செவ்வாயில் 80 ஆயிரம் பேர் தங்கும் நகரம் - 10 ஆண்டுகளில் குடியேறலாம்!

செவ்வாயில் 80 ஆயிரம் பேர் தங்கும் நகரம் - 10 ஆண்டுகளில் குடியேறலாம்!
[Tuesday, 2013-01-08
News Service
80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரம் உருவாகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு நாசா மையம் அனுப்பிய பொருட்களை, அமெரிக்காவின் பேபால் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் கொண்டு சென்றது. இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. அதற்காக தலா ரூ.2 கோடி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 80 ஆயிரம் பேரை அழைத்து சென்று தங்க வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
  
எனவே, செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும், கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல்
சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க விரும்புபவர்கள் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது அவசியம். அவர்கள் அனைவரும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்க வேண்டும். அசைவ பிரியர்களுக்கு அங்கு இடமில்லை என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...