Jan 9, 2013

விண்வெளியைப் பற்றிய அரிய புகைப்படங்களை, வெளியிட்டது நாசா!

விண்வெளியைப் பற்றிய அரிய புகைப்படங்களை, வெளியிட்டது நாசா!
[Monday, 2013-01-07 09:38:48]
News Service விண்வெளியைப் பற்றிய காணக்கிடைக்காத அரிய புகைப்படங்களை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சுவிப்ட் வானிலை ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன டெலஸ்கோப், விண்வெளியின் புற ஊதாக்கதிர்களை பற்றி ஆராய்ந்து வருகிறது. விண்வெளியில் பெருமளவில் இந்த புறஊதா ஒளிதான் நிறைந்துள்ளது. டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு அரிய புகைப்படங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
  
இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, நாசாவும், பென் ஸ்டேட் பல்கலைக்கழகமும் இணைந்து புத்தாண்டு பரிசாக, பொதுமக்களுக்கு இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து பென் ஸ்டேட்
பல்கலைக்கழகத்தின் வானிலை ஆராய்ச்சியாளர் மைக்கேல் சீகல் கூறியதாவது:
சாதாரண கண்ணால் பார்க்க முடியாத புறஊதாக்கதிரின் அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். மனித குலம் பார்க்க முடியாத இவற்றை புத்தாண்டு பரிசாக வெளியிட்டுள்ளோம். பல வித்தியாசமான மற்றும் அரிய புகைப்படங்களை நாங்கள் ஆராய்ச்சிக்காக சேமித்து வந்தோம். இவற்றைதான் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம். இவ்வாறு ஆராய்ச்சியாளர் மைக்கேல் சீகல் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...