May 1, 2013

50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரத்தில் அடைந்து ரஷ்யா சாதனை


விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அடைவதற்கு இதற்கு முன்னர் வரை 50 மணி நேரம் தேவைப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு, பூமியின் சுற்றுவட்டப் பாதையை 30 முறை சுற்றி வந்த பின்னரே விண்வெளி நிலையத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.
ஆனால், ரஷ்யாவில் உள்ள பைக்கனோர் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து சமீபத்தில் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 3 வீரர்கள், ஆறே மணி நேரத்தில் தங்களின் இலக்கை அடைந்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த பவேல் வினோக்ரடோவ், அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் கேசிடி ஆகிய மூவரும் பூமியை 30 முறை சுற்றுவதற்கு பதிலாக 4 முறை மட்டுமே சுற்றிவிட்டு வளி மண்டலத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்து சுமார் ஆயிரம் மைல் மட்டும் பயணித்து 6 மணி நேரத்தில் இவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாகச பயணம் தொடர்பாக கருத்து கூறிய ரஷ்யாவின் தலை சிறந்த விண்வெளி வீரர் பவேல் வினோக் ரடோவ், ‘விண்வெளிக்கு செல்பவர்கள், பூமியில் இருந்து புறப்பட்ட 4-வது மணி நேரத்தில் உடல் பளுவை இழப்பது, சில உடல்நல உபாதைகளுக்கு உள்ளாவது போன்ற சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். அதன்பிறகு தொடர்ந்து 45 மணி நேரம் பயணம் செய்யும் வீரர்களில் சிலர் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
தற்போதைய புதிய சாதனையால் 6 மணி நேரத்தில் அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இறங்கி, உற்சாகத்துடன் பணியாற்ற முடியும். பூமியில் இருந்து ஐஸ் கிரீமை கூட கொண்டுச் சென்று உருகும் முன்னர் விண்வெளி நிலையத்தில் அமர்ந்து சாப்பிடலாம்’ என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...