Apr 11, 2014

புதிய உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவி இஸ்ரேல் சாதனை



இஸ்ரேல் புதிய உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவி, புவியின் சுற்று வட்டப்பாதையில் நிறுத்தி சாதனை படைத்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த புதிய உளவு செயற்கைகோளை, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களை கண்காணிக்க பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான வான்வெளி தொழிற்துறை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய உளவு செயற்கைகோளான 'ஓபெக்-10' நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே, அந்த செயற்கைக்கோள் தகவல் மற்றும் படங்களை அனுப்ப தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முழுமையான செயல்பாட்டிற்கு வரவுள்ளது. ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவே இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இலகுரக செயற்கைக்கோள், நாளின் எந்த நேரத்திலும், எவ்விதமான வானிலை சூழ்நிலையிலும் கூர்மையான படங்களை எடுத்து அனுப்பும் திறன் பெற்றது. இதனால் இஸ்ரேல் நாட்டின் உளவு திறன்கள் மேம்படுத்தப்படும். இஸ்ரேல் தமது அண்டை நாடுகளைவிட மிகப்பெரிய அளவில் தர மற்றும் தொழில்நுட்ப உத்திகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மற்ற சாதாரண செயற்கைக்கோள்களை விட,  படமெடுக்கும் ரேடாரை திசை திருப்பி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி குறிவைத்து இயக்கும் திறன் கொண்டது.

பொதுவாக மற்ற நாடுகள் புவி சுற்றுவட்டப்பாதையின் கிழக்கு திசையை நோக்கியே செயற்கைகோள்களை ஏவும். ஆனால் இஸ்ரேல் இந்த புதிய உளவு செயற்கைகோளை அதற்கு நேர்மாறாக புவி சுற்றுவட்டப்பாதையின் எதிர்திசையில் அதாவது மேற்கு நோக்கி ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...