Apr 11, 2014

கோளாறு காரணமாக வையோ லேப்டாப்பை திரும்பப்பெறும் சோனி நிறுவனம்

கோளாறு காரணமாக வையோ லேப்டாப்பை திரும்பப்பெறும் சோனி நிறுவனம்டோக்கியோ, ஏப்.11-

ஜப்பானின் பிரபலமான சோனி நிறுவனம் தாங்கள் விற்பனை செய்துள்ள புதிய வையோ பிட் 11ஏ லேப்டாப்பில் பேட்டரி அதிக அளவில் சூடாகும் பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள அந்நிறுவனம் தாங்கள் விற்பனை செய்துள்ள 26,000 சாதனங்களையும் திரும்பப் பெற உள்ளதாகவும், அதுவரை பாதுகாப்பு கருதி அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிமுகத்தினை டேப்லெட் வடிவிலும், பாரம்பரியமான கம்ப்யூட்டர் வடிவிலும் உபயோகப்படுத்தமுடியும் என்பது அதன் சிறப்பாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்ட இந்த வகை விற்பனையில் இதுவரை 25,905 சாதனங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களுக்குள் பழுது பார்த்தல் உட்பட மேலும் பல விபரங்களை வெளியிடுவதாகவும் சோனி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பேட்டரி அதிக சூடாவதால் லேப்டாப்பின் பாகங்கள் சேதமடையக்கூடும், எனவே வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தங்களின் லேப்டாப் கருவிகளை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த லேப்டாப்பில் உபயோகப்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் அவர்களின் போட்டி நிறுவனமான பானாசோனிக்கால் தயாரிக்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...