Apr 11, 2014

உங்கள் கணினி பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள்




உங்களுடைய கணினி பற்றிய பூரணமான தகவல்களை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் மென்பொருள்களின் துணையின்றி கணினி பற்றிய தகவல்கள் அனைத்தையும் பார்ப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஒவ்வொரு விடயங்களை பார்ப்பதற்கும் ஒவ்வொரு பகுதிக்கு செல்லவேண்டும். அவ்வாறு அல்லாமல் கணினி பற்றிய அத்தனை விடயங்களையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

இதற்கு உதவி செய்கிறது SIV எனப்படும் சிறிய மென்பொருள். இது உங்கள் கணினி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. 4.25 Mb அளவுடைய Zip File இல் இந்த மென்பொருள் வருகிறது. கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. Zip File ஐ Extract பண்ணி மென்பொருளை Open பண்ணலாம்.

இம் மென்பொருளை Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணினி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும். மென்பொருளின் கீழ் பக்கத்தில் பல Tab கள் காணப்படும். முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் அதில் விரிவாக காணலாம்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...