Apr 11, 2014

இங்கிலாந்து: நிறவெறிக்கு எதிரான இந்திய மருத்துவர்களின் வழக்கு தோல்வி

இங்கிலாந்து: நிறவெறிக்கு எதிரான இந்திய மருத்துவர்களின் வழக்கு தோல்வி


லண்டன்; ஏப். 11- 

இங்கிலாந்தில் பொது மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வை நடத்துகின்றன.

இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர்.

எனவே இவர்களின் தேர்வு முறையில் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்திய வம்சாவளி மருத்துவர்களின் பிரிட்டிஷ் அமைப்பு(பேபியோ) வழக்கு தொடுத்திருந்தது.  இந்த வழக்கின் விசாரணை கடந்த 8ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி மிட்டிங் நேற்று வெளியிட்ட தனது தீர்ப்பில் சமத்துவ சட்டத்திலோ, மருத்துவத் தேர்வுகளின் முடிவுகளிலோ எந்தவிதமான தேசிய அல்லது நிற வேற்றுமைகளுக்கான விதிமீறல்கள் செயல்படுத்தப்படவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

இருப்பினும் தேர்வினை மேற்கொள்ளும் வெள்ளையர் மற்றும் பிற இனத்தவர்களின் தேர்ச்சி விகிதங்களுக்கான காரணங்களை மருத்துவக் கவுன்சில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மக்களின் சிறந்த நலன்களுக்காக செயல்பட்டுவரும் பேபியோ அமைப்பு ஒரு நல்ல நம்பிக்கையின் பேரில் பொதுமக்களின் நன்மைக்காக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது என்று அவர் கூறினார். எனவே சட்ட ரீதியான வெற்றி அந்த அமைப்பிற்குக் கிட்டவில்லை என்றபோதிலும் தார்மீக வெற்றியை அது அடைந்துள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...