May 7, 2014

மே.7: சோனி நிறுவனத்திடமிருந்து பத்து பாடங்கள்- தொடங்கிய தின சிறப்பு பகிர்வு!



மே.7: சோனி நிறுவனத்திடமிருந்து பத்து பாடங்கள்- தொடங்கிய தின சிறப்பு பகிர்வு!

07/05/2014Last updated : 12:50 (07/05/2014)
புதிய பாதையில் பயணி :
இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம்,சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப பிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி !
முயன்றால் எதுவும் சாத்தியம் :
375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள்.  டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் அவர். பள்ளிகளில் நல்ல
வாய்ப்பு
இருப்பதை உணர்ந்து இறங்கி கலக்கினார்கள். லட்சங்கள் குவிய ஆரம்பித்தது.
ஆய்வு செய் ! அற்புதம் நிகழும் :

லட்சங்கள் குவிய ஆரம்பித்தாலும் பத்து சதவிகிதத்தை ஆய்வுகளில் யோசிக்காமல் முதலீடு செய்தார்கள். npn என்று டயோட் இருந்தால் இன்னமும் சிறப்பாக ட்ரான்சிஸ்டர் வேலை செய்யும் என்று புரிந்தது. அதை தயாரிக்க உரிய பொருளைத்தேடி அலைந்த பொழுது பாஸ்பரஸ் நல்லபடியாக சொன்னதை கேட்டது. அப்பொழுதைய ஜாம்பாவன் பெல் லேப்ஸ் நிறுவனமோ பாஸ்பரஸ் வேஸ்ட் என்றிருந்தது. ஆனாலும்,நம்பிக்கையோடு ஆய்வுகளை தொடர்ந்தார்கள்.
துல்லியமான ட்ரான்சிஸ்டர்கள் உருவாகின. அந்த ஆய்வின் பொழுது எழுந்த 'double tunneling effect' ஒரு நோபல் பரிசை கூடுதல் போனஸாக தந்தது
பெயரும் முக்கியம் ஜெயிக்க :

ஏழை நாடாக இருந்த ஜப்பானை விட அடித்துக்கிளப்பும் அமெரிக்கா நல்ல சாய்ஸ் என்று பட்டது மோரிடாவுக்கு. அங்கே போய் கம்பெனி நடத்தலாம் என்று முடிவு செய்த பொழுது ஈர்க்கும் ஒரு பெயருக்கு அலைந்தார்கள். இலத்தீனில் ஒலியை குறிக்கும் சோனஸ் தாக்கத்தில் சோனியை வார்த்தார்கள். தரமும் சேர்ந்து கொள்ள சோனி சாதித்தது !
குறைத்து எடை போடாதே உன்னை :

அமெரிக்காவின் ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்திருந்தார்கள் சோனி. அன்றைக்கு ஷேர்களின் விலை என்ன என்று அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமெரிக்க ஆள் ரூமில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். விலையை அறிவிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் நிலவரம் என்ன என்று விசாரித்தால் அதிர்ச்சி !  ல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் ஓயாமல் அழைத்து விலையென்ன என்று கேட்கிறார்கள். மதிப்பு வெகு உச்சத்தில் இருக்கிறது என்று சொன்னதும் டாப் விலை சொன்னார்கள் !
தேவைகளில் இருந்து புதிதைத்தருக  :

பீச்சுகள் வரை டேப் ரெக்கார்டர்களை கொண்டு போய் மக்கள் சிரமப்பட்டு பாடல் கேட்பதை பார்த்தார் இவர். பெல் லேப்ஸின் தொழில்நுட்பத்தில் இருந்து பாடல் கேட்கும் ஒரு கருவியை படைத்தார்கள். அதை ஆங்காங்கே எடுத்து  அளவை சிறிதாக்க சொன்னார் அகியோ மோரிடா. பின்னர் நண்பர் இபுகா இப்படி சத்தமாக கேட்கவும் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல ஹெட்செட் என்கிற கான்செப்டை கொண்டு வந்தார்கள். அப்படியும் இளைஞர்களின் கனவுப்பொருளான வாக்மேன் வந்தது இப்படித்தான் !

தவறுகளை ஒத்துக்கொள் :

கால்குலேட்டர் பிஸினசில் நுழைந்திருந்தது சோனி. பல ஜப்பானிய நிறுவனங்களும் அதில் ஈடுபட்டதால் பெரிதாக வருமானம் கிடைக்காமல் அந்த தொழிலை மோரிடா இழுத்து மூடிவிட்டார். ஆனால்,அதை அப்படியே வைத்திருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் உலகை முற்றுகையிட்ட கணினித்துறையில் இன்னமும் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் அவர்
குடும்பம் நிறுவனம் :

சோனியில் தலைமை அதிகாரிக்கும்,அடுத்தடுத்து இருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சம்பள விகித வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது. எல்லா நபர்களையும் குடும்பம் போல நடத்துவார்கள். வெறும் பட்டம் மட்டுமே திறமைக்கு அளவுகோலாக கொள்ளப்படாமல் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறி கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் தருவது உறுதி செய்யப்பட்டது ! கோக கோலா,ஜெனரல் மோட்டர்ஸ் என்று டாப் நிறுவனங்களுக்கும் மேலே அமெரிக்காவில்
நம்பகத்தன்மை பெற்று நின்றது சோனி !
விளம்பரம் கொஞ்சம் வில்லங்கம் :
ஒரு புதிய கருவியை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருந்தார் மோரிடா. அது பெரிய ஹிட் அடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் ஒழுங்காக விற்க வைக்க அதிகபட்ச விளம்பரங்களை செய்யச்சொல்லி ஏஜ் இருந்த அதிகாரிக்கு உணர்த்த ,"இவ்வளவு மில்லியன் டாலர் நீங்கள் செலவு செய்யவேண்டும் ! இல்லையென்றால் வீட்டுக்கு போக வேண்டியது தான் !" என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே செலவு செய்தார் அந்த அதிகாரி. என்ன ! மற்ற பொருள்களுக்கான விளம்பரத்தை குறைத்து அதை இந்த புது குழந்தைக்கு திருப்பி எப்பொழுதும் ஆகும் செலவுக்குள்ளேயே சாதித்தார் !
செய் ! செய்யாதே ! :

"தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள் ,ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் " என்பதை தன் தாரக மந்திரமாக கொண்டிருந்த அகியோ மோரிடா ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ரோல் மாடல். மேட் இன் ஜப்பான் என்கிற பிராண்டை உலகத்தின் தரத்தின் உச்சமாக மாற்றிய உழைப்பில் எண்ணற்ற நாட்டு மக்களை ஈடுபடுத்திய அவரும்,அவர் தோழர் இபுகாவும் ,"எதுவும் முடியாது என்று சொல்லத்தெரியாத நாடு ஜப்பான் !" என்றே அறியப்பட வேண்டும் என்றார். பெயர் மாறினாலும் நம் நாடும் அப்படி ஆக பயணிப்போம் !
.உலகப்போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில்நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும்,இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள் .1946 இல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள் .முதலில் மிகப்பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை ;பார்த்தார் மனிதர் .பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள் ;மாபெரும் வெற்றி பெற்றது அது  .அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் .அதையே எட்டு இன்ச் டிவி ,வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள் .உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான் என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சி கரமான பெயரை யோசித்தார்கள் .இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர் ;அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம் .சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார் ;நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார் ;.ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்கா விட்டால் தான் பதவி விலகுவதாக
சொல்லி சாதித்தவர் .அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர் ;ஜப்பானியர் என்கிற பெருமையை அவர் விடவில்லை .அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார் ;எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில்  மக்களால் பார்க்கப்பட்டது .தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர் .என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்குரோல் மாடல்  அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத்தெரியாத ஜப்பான் -அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார் .அவரின் பிறந்த  நாள்
இன்று  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...