Sep 15, 2012

யாஹூவின் புதிய சிஇஒவாக முன்னாள் கூகுள் துணைத் தலைவர் மரிஸா மேயர் நியமனம்

 Marissa Mayer Is The New Ceo Yahoo
சன்னிவேல்: யாஹூ இணைய தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள்வரை கூகுள் தேடுதளத்தின் துணைத்தலைவராக இருந்த அவர் இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.
1999ம் ஆண்டு கூகுளின் முதல் பெண்

கூகுள் முன்னாள் சிஈஓ சம்பளம் 1 மில்லியன் டாலரிலிருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்தது!


.
 Google Ex Ceo Eric Schmidt Salary Rises 1 25 Dollar Aid0216வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் தற்போதைய செயல் தலைவருமான எரிக் ஸ்மித்தின் ஆண்டு ஊதியமானது 1 மில்லியன் டாலரில் இருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2010-ம் ஆண்டில் அவர் 1 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் 1.25 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது.

கூகுள் நிறுவனத்தில் ஸ்மித்துக்கு அடுத்த நிலையில் ஊதியம் பெறுவோரைவிட இது 4 மடங்கு அதிக உயர்வு. கூகுளின் மற்றொரு நிறுவனரான லர்ரி பேஸ் இப்பொழுது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அதேபோல் நிறுவனர்களில் மற்றொருவர் செர்ஜி பெயின். இருவரும் பெறும் தொகையைவிட இது கூடுதலாகும். இருவரும் தமது சொத்துகளின் பெரும்பகுதியை நேரடியாக கூகுளின் பங்குகளில் இணைத்திருக்கின்றனர்.

ஸ்மித் பொறுப்பேற்ற பிறகு கூகுள் தேடுதளமானது முன்னைவிட கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளது. அவரால் தோராயமாக 38 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை கடந்த ஆண்டு உருவாக்க முடிந்திருக்கிறது.

ஸ்மித்துக்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியம் பெறுபவர் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி நிகேஷ் அரோரா. 2010-ம் ஆண்டு 22.6 மில்லியன் டாலர் பெற்றிருந்த அவர் கடந்த ஆண்டு 23.2 மில்லியன் டாலரைப் பெற்றிருக்கிறார்.

Sep 14, 2012

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: லிபியாவில் 22 பேர் கைது- 9 நாடுகளில் கலவரம் பரவியது



அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: லிபியாவில் 22 பேர் கைது- 9 நாடுகளில் கலவரம் பரவியதுபென்காசி, செப். 14-

முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட சினிமா படத்தை கண்டித்து பல நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் லிபியாவில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடந்தது. ராக்கெட் குண்டுகளை வீசி பயங்கரமாக தாக்கினார்கள். இதில் அமெரிக்க தூதர் கிரீஸ் ஸ்டீவன்ஸ் உள்பட 4 அமெரிக்க தூதரக அதிகாரிகள்

சூறாவளி தாக்கும் என பயந்து குளிர்சாதன பெட்டியில் 4 நாட்கள் பதுங்கிய பெண்: உறைந்த நிலையில் உயிருடன் மீட்பு



நியூயார்க், செப்.14-
 
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்தவர் தெரசா கிரிஸ்டியன் (59).  இவரை சில தினங்களாக காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்து தேடிவந்தனர்.

கவுதமலாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்



கவுதமலாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்கவுதமலாசிட்டி,செப். 14-

வட அமெரிக்காவில் உள்ள கவுதமலா நாட்டில் “பியூகோ” என்ற இடத்தில் மிகப்பெரிய எரிமலை உள்ளது. அந்த எரிமலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அது பயங்கர சத்தம் எழுப்பி வருகிறது. அதில் இருந்து சாம்பலும், புகையும் வெளியாகிறது.

சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம்



சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம்சுமத்திரா,செப்.14-
 
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவு அருகே மென்டாவை தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. கடலுக்கடியில் 25 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
பெங்குலு என்ற நகரத்திற்கு வடமேற்கே 190

ஆப்கானிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி- பஸ் மோதி தீப்பிடித்தது: 50 பேர் கருகி சாவு



காஸ்னி(ஆப்கான்), செப். 14-
 
ஆப்கானிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி- பஸ் மோதி தீப்பிடித்தது: 50 பேர் கருகி சாவுஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினருக்கு பொருட்கள் கொண்டு செல்லும் முக்கிய சாலையான காபூல்- காந்தகார் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று காலை காஸ்னி மாகாணத்தில் உள்ள ஆப் பந்த் மாவட்டத்தின் ஸ்பின் பந்த் பகுதியில் எண்ணெய் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

காங்கோ காடுகளில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு காங்கோ வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14,



காங்கோ காடுகளில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்புகாங்கோ, செப்.14-
 
ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ காடுகளில் புதியவகை குரங்கு இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லெசுலா என்று அழைக்கப்படும் இவ்வகை குரங்குகள் வளை வான பழுப்பு நிற மூக்கினை கொண்டதாகவும், முகம் முழுக்க செம்பட்டை ரோமம் உடையதாகவும் உள்ளது.

அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு: விமானத்தை கடத்தியவர்களின் ஆன்லைன் வீடியோ வெளியீடு



அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு: விமானத்தை கடத்தியவர்களின் ஆன்லைன் வீடியோ வெளியீடுதுபாய், செப். 14-

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு விமானத்தை கடத்தியவர்களின் வீடியோவை அல்-கொய்தா இணைய தளத்தில் வெளியிட்டது.

அல்கொய்தா தீவிரவாதிகள், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரத்தின் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

வேற்று கிரகவாசிகள் பல கிரகங்களில் வாழ்கின்றனர்: விஞ்ஞானிகள் தகவல்


வேற்று கிரகவாசிகள் பல கிரகங்களில் வாழ்கின்றனர்: விஞ்ஞானிகள் தகவல்             
லண்டன், செப். 12-

பூனையை போன்று மனிதர்கள் வாழ தகுதியுள்ள பல கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை மிக வெப்பமாகவும், மிக குளிராகவும் உள்ளன. அவற்றின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அவை உறைந்த நிலையிலும், திரவ

ஜப்பான் கடல் எல்லைக்கு விரைந்தது ஆறு சீனக் கண்காணிப்பு கப்பல்கள்


ship_14_9பீஜிங் : ஜப்பான் நாட்டுக்கு அருகே உள்ள சென்காகு தீவு மற்றும் சீனாவுக்கு அருகிலுள்ள டியாயூ தீவு பகுதிகளில் உள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் கப்பல் எரிவாயு நிறைந்துள்ள தீவுகளாகும். இந்தத் தீவுகளை வாங்குவதில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், நேற்று சீனா தனது 6 கண்காணிப்பு போர்க் கப்பல்களை ஜப்பான் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் சர்வதேச கடல் சட்டத்தின்படி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கப்பல்களை அனுப்பியுள்ளோம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...