Nov 7, 2012

பேஸ்புக் தளத்திலுள்​ள வீடியோக்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு



பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்டு மாபெரும் சமூக இணையத்தளமாக உருவெடுத்து நிற்கின்றது பேஸ்புக்.இத்தளமானது நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள உதவுவதோடு, தற்போது வீடியோக்களை பகிரும் தளமாகவும் சிறிது சிறிதாக மாறிவருகின்றது. எனினும் இங்கு பகிரப்படும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கும் வசதி தரப்படுவதில்லை.
இதனால் குறைப்பட்டுள்ள பயனர்களுக்கு அந்த குறையை நீக்கும் முகமாக தற்போது Facebook Video Download எனும் கூகுள் குரோம் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நீட்சியை நிறுவிக் கொண்டதும் குரோமில் URL பகுதிக்கு அடுத்ததாக

உடல் பருமனான நபர்கள் சந்திக்க கூடிய பிரச்னைகள்



உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)அறிக்கை படி, உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity.இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால், நிச்சயம் அனைவரும் சிறு வயது முதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நமது சூற்றுபுறச்சூழல், பழக்க வழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம்.
உடல் பருமனால் தேவையில்லாத நோய்கள் நான், நீ என்று போட்டி

விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்


[ செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012,
புதிய முறையில் இயங்கி எதிர்பாராத வசதிகளை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விண்டோஸ் 8.குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக்கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் போன்றவற்றை விடுத்து மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.
Antivirus
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் புதிய முறையில் ஆன்ட்டி வைரஸ் மற்றும் பாதுகாப்பு புரோகிராம் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது.
Windows Defender என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நம் பெர்சனல் கணனியை வைரஸ், மால்வேர், ட்ரோஜன் புரோகிராம்கள் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
Battery Back up, Speed Boot up
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பெர்சனல் கணனிகள் மிக வேகமாக Boot ஆகும்படி

ரோம்னி உருக்கம் ஒபாமாவை வாழ்த்துகிறேன்



பாஸ்டன் : அமெரிக்காவை வழி நடத்துவதில் ஒபாமா வெற்றி பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று தேர்தலில் தோற்ற மிட் ரோம்னி உருக்கமாக பேசினார்.
தேர்தல் தோல்வியை ஏற்று கொண்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பாஸ்டன் நகரில் தனது ஆதரவாளர்களிடையே பேசியதாவது:

அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசி, அவருக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். பிரசாரத்தில் தேவையான

மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி



மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி
நகரி, நவ.7-

இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூறி

மீண்டும் அதிபரானார் ஒபாமா : மக்களுக்கு நன்றி தெரிவித்தார்


அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை தோற்கடித்து, பராக் ஒபாமா 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், அமெரிக்க அதிபராகத் தேர்வாக தேவையான 270 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், ஒபாமா 303 வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஒபாமா, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர்.
ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி 201 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
மிட் ரோம்னிக்கும், பராக் ஒபாமாவுக்கும் இடையே கடினமான போட்டி நிலவி வந்த நிலையில், ரோம்னியை விட சுமார் 100 வாக்குகளை அதிகம் பெற்று ஒபாமா மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னை மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்துள்ள நாட்டு மக்களுக்கு இணையதளம் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையான தன்னை அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்ததற்கு நன்றி. இன்னும் 4 ஆண்டுகள் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

Nov 6, 2012

விரைவில் சீன அதிபராகும் ஜி ஜின்பாங்.. என்ன நடக்கும்?



 China S Mystery Princeling Xi Jiping Takes Top Spot பெய்ஜிங்: சீனாவின் புதிய அதிபராக பொறுப்பேற்கக் கூடிய துணை அதிபர் ஜி ஜின்பாங் எப்படியான கொள்கைகளைக் கொண்டவர் என்பது பற்றிய தகவல்களை அப்படி ஒரு பரம ரகசியமாக காத்து வருகிறது சீனா கம்யூனிஸ்ட் கட்சி!
சீனாவின் தற்போதைய அதிபர் ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய நிலையில் 59 வயதான ஜி ஜின்பாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் அதிபராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய அதிபராக்கும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்?
nasa_6 சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
புளோரிடா:பூமிக்கு மேலே சுற்றிவரும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை (ஐ.எஸ்.எஸ்.,)தொலைநோக்கி உதவியில்லாமல், வெறும் கண்ணால் பார்க்க, “நாசா’ ஏற்பாடு செய்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல நாடுகள் ஒன்றிணைந்து, பூமிக்கு மேல், 410 கி. மீ.,உயரத்தில்,
வாஷிங்டன்: அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின்,

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப் பதிவு துவங்கியது

வாக்களிப்பு ஆரம்பித்துள்ளதுஅமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிக அதிகமான பிரச்சார செலவுகளுடன் நடக்கின்ற அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு ஆரம்பித்துள்ளது.
மாதக்கணக்கில் பிரச்சாரங்கள் நடந்திருந்த நிலையில், இருவேட்பாளர்களுக்கும் இடையே ஆதரவில் சற்றுதான் வித்தியாசம் என்று கருத்துக் கணிப்புகள் காட்ட போட்டி மிகக் கடுமையாகவுள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பெரும்பாலும் இதற்கு முன்பு இல்லாத ஒரு நடைமுறையாக முக்கிய மாகாணங்களான ஒஹையோ மற்றும் பென்சில்வேனியாவில் வாக்காளர்கள் மத்தியில் தோன்றினார்.
அதிபர் ஒபாமா இயோவா மாகாணத்தில் நேற்று திங்களன்று நடந்த தேர்தல்

ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்


ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்புதுடெல்லி, நவ. 6-


உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.


இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...