Nov 29, 2012

ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்

ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்
[Monday, 2012-11-26
News Service கூந்தலை காய வைப்பதற்கு 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது. அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். கூந்தல் உதிருவதற்கு ஒரு காரணம் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது. ஏனெனில் குளித்தது முடித்ததும் முடித்துளைகள் சற்று தளர்ந்து இருக்கும்.
  
அப்போது அந்த இடத்தில் ட்ரையரை பயன்படுத்தும் போது, அதிகமான வெப்பம் பட்டு கூந்தல் எளிதில் உதிருகிறது. மேலும் தலையில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் கூட, அது அப்படியே தங்கிவிடும். பின் கூந்தல் உதிர்தலை தடுப்பது கடினமாகிவிடும். எப்போது தலைக்கு குளித்தாலும் கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதால், அதிக அளவு வெப்பம்

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிக்காய்

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிக்காய்
[Tuesday, 2012-11-27
News Service அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.
  
செயல்திறன் மிக்க சத்துக்கள்
பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன.
நன்மை தரும் நார்ச்சத்து
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற

காரமான உணவுகள் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்

காரமான உணவுகள் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்
[Sunday, 2012-11-25
News Service பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  
அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று

கிரீன் டீ குடிப்பதன் மருத்துவ பலன்கள் ..




கிரீன் டீ குடிப்பதன் மருத்துவ பலன்கள் ..
[Monday, 2012-11-26
News Service கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்..
  
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க

ஹார்ட் அட்டாக் வரப்போவதை தலைமுடியின் மூலமே அறியலாம் - கனடா ஆய்வாளர்கள் தகவல்

ஹார்ட் அட்டாக் வரப்போவதை தலைமுடியின் மூலமே அறியலாம் - கனடா ஆய்வாளர்கள் தகவல்
[Monday, 2012-11-26
News Service மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேற்று வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
  
வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க

Google Chrome இன் திறனையும் வேகத்தையும் அதிகரிக்க சில வழிகள்..

Google Chrome இன் திறனையும் வேகத்தையும் அதிகரிக்க சில வழிகள்..
[Tuesday, 2012-11-27
News Service கூகுளின் குரோம் தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம்.
  
1. தொடங்கும் இணையப் பக்கம்
ஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது.
இதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக்

Rahu Ketu Peyarchi Palangal 2012 | 12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களும் எளிய பரிகாரமும்!

Rahu Ketu Peyarchi Palangal 2012 | 12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களும் எளிய பரிகாரமும்!

Nov 28, 2012

கனடாவில் அகதிக் கோரிக்கையா? புதிய கட்டுப்பாடுகள் - ஆயிரம் முறை யோசித்தே முடிவெடுங்கள்!


[Monday, 2012-11-26
News Service ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.
  
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.
2013ம் ஆண்டில் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களில் அகதிகளின்

இங்கிலாந்தில் கொட்டும் மழை - வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்! [Monday, 2012-11-26




News Service இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த பலத்த மழையில் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த புதன்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன.
  
மழை வெள்ளத்தில் மரம் விழுந்தும், காரில் சிக்கியும் 2 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள்

உலகிலேயே செக்சியான மனிதர் வடகொரிய அதிபராம்! - சீன நாளிதழ் குசும்பு


[Wednesday, 2012-11-28
News Service உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங்தான் உலகிலேயே செக்சியான மனிதர் என்று சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.
  
சும்மா காத்து வாக்கில் வரும் செய்திகள், அரசல் புரசல் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களுக்கு கண், காது, மூக்கு வைத்து சுவாரஸ்யமாக கூறும் செய்திகளை ஆனியன் என்கிறார்கள். உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பதால் இந்த பெயர். அமெரிக்காவில் தி ஆனியன் என்ற பெயரில் நாளிதழும் இணையதளமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம்ஜாங்யுன்ஐ தி ஆனியன் மீடியா நிறுவனம் இந்த ஆண்டின் செக்சியான மனிதர் என்று அறிவித்திருப்பதாக சீனாவின் தி பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டுள்ளது. இளமையானவர், அழகானவர், உருண்டை முகம்

செவ்வாய் கிரகத்தில் 80 ஆயிரம் பேரைக் குடியேற்றத் திட்டம்! [Wednesday, 2012-11-28




News Service செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
  
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.இது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...