Jan 7, 2013

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா


எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள்

பூமியை நெருங்கும் விண்கல்


பெப்ரவரி 15 ஆம் திகதி விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்வைக் கண்காணிக்க, சர்வதேச விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர். 
2012 டிசம்பர் 21ஆம் திகதி நிபுரு என்ற கற்பனையான கோள், பூமியின் மீது மோதப்போவதாக வெளியான இணையதள தகவல்கள் அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்தது. 
 
ஆனால் அந்தத் தகவல் பொய்யானது என்று நிரூபணமாகி சில நாட்களே ஆன நிலையில் மற்றொரு அதிர்ச்சியான தகவலை ஸ்பெயின் நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 
 
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி 2012 DA 14 என்று பெயரிடப்பட்டுள்ள

தென் மேற்கு பிரான்சில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்


[ திங்கட்கிழமை, 07 சனவரி 2013,
பிரான்சின் தென்மேற்கு பகுதியான லூர்தெஸ் நகரில் நேற்று தொடர்ச்சியாக நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.பிரான்ஸ் நேரப்படி நள்ளிரவு 12.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிரெஞ்சு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்நிலநடுக்கம் கத்தோலிக்க புனித தளமான லூர்ரெஸில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் பாதிப்பு 30 கிலோமீற்றர் தூரம் வரை உணரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

உறைப‌னியா‌ல் ‌சீனாவே ‌ஸ்த‌ம்‌பி‌த்தது


திங்கள், 7 ஜனவரி 2013
சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்து துறைமுகத்தில் 1000 கப்பல்கள், பயணங்களை மேற்கொள்ள முடியாமல் த‌வி‌த்து வரு‌கி‌ன்றன. பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா‌‌ல் ‌சீனாவே ஸ்தம்பித்துள்ளன.

சீனாவில் -7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்ட நிலையில் பல்வேறு சீன நகரங்கள் வெள்ளை போ‌ன்று காட்சியளிக்கிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் சீன பெருங்கடலும்கூட உறைபனியாகி உள்ளது.

சீனாவின் லயோனிங் மாகாணத்தின் ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் உறைந்து நி‌ற்‌கி‌ன்றன. அவைகளை மீட்க முடியாமல் கடற்படையினர் சிரமத்தில் உள்ளனர்.

இதனால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. சீனாவில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மோசமான தட்பவெப்ப நிலையால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது.

தென் சீனாவிலும் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடலின் நடுவில் சிக்கியுள்ள மாலுமிகள் மீட்கும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர். உறைந்துள்ள பனிக்கட்டிகளால் கப்பல்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ: 100 பேரை காணவில்லை



அவுஸ்திரேலியாவின், டஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவுஸ்திரேலியாவின் டஸ்மானியா தீவுகளில், கடுமையான வெயில் காரணமாக வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாக உள்ளது.
இதனால் அங்குள்ள காடுகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
எனவே அப்பகுதி மக்கள் 3000 பேரை மீட்புபடையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
ஒரு சில உடல்கள் எரிந்த நிலையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அப்பகுதியில் வாழும் 100 பேர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 வருடங்களுக்கு முன் விக்டோரியாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 173 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இனி பேஸ்புக்கில் நண்பர்களுடன் இலவசமாக பேசலாம்


உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம்.

நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.

தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனுப்பும் சுலப யுத்திகளும் அதில் உள்ளது.

Jan 6, 2013

வெங்காயம் இருக்க பயமேன்!

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

  • சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.
    1.வெந்தையம் – 50 கி
    2.கருஞ்சீரகம் – 25 கி
    3.ஓமம் – 25 கி
    4.சீரகம் – 25 கி

  •  இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

    ஒரு வாரத்திற்கு பின் சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

அமெரிக்க அதிபராக ஒபாமா 20ஆம் தேதி பதவியேற்பு


அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர் குழு வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அப்போது, ஓஹையோவில் பதிவான வாக்குகள் தொடர்பான சான்றிதழை அந்த மாகாண அவைத் தலைவர் ஜான் போய்னரிடம் காட்டுகிறார் துணை அதிபர் ஜோ பிடன் (இடது).

First Published : 05 January 2013
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா இம்மாதம் 20ஆம் தேதி பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு மாகாணத்திலும் வெற்றி பெற்ற வாக்காளர் குழு (எலக்டோரல் காலேஜ்) உறுப்பினர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். அந்த முடிவுகளை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த

வரலாறு காணாத குளிர் : சீனாவில் கடல் உறைந்தது


ஷாங்காய்: சீனாவில் 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. கடல் நீர் உறைந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கித்தவிக்கின்றன. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் 3.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இது கடந்த ஆண்டை விட 1.3 டிகிரி குறைவு, 28 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை என்று சீன வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடும் குளிர் காரணமாக ஷான்டாங் மாகாணம் லெய்ஜோ வளைகுடாவில் கடல் நீர் உறைந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் நகர முடியாமல் சிக்கியுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் மத்திய ஹுனான் மாகாணத்தில் 140 விமானங்கள் தாமதம் அடைந்தன.

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம்





ஜுனியா: அலாஸ்கா அருகே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அலாஸ்காவின் தெற்குப் பகுதி மற்றும் கனடாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் 7.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தது. கிரேய்க் பகுதிக்கு மேற்கே 97 கி.மீ தொலைவில் பசிபிக் கடலில் 9 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கார்டோவ் நகருக்கு தென்கிழக்கே 121 கி.மீ தொலைவில் தொடங்கி வான்கூவர் தீவின் வடக்கு முனை வரை சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...