May 1, 2013

யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாழ்ப்பாணம்
ஒரு தோற்றம்.
மேலிருந்து இடதுபுறமாக: பொது நூலகம், யாழ் பல்கலைக்கழகம், கந்தரோடை தொல்லியல் களம், நல்லூர் கந்தசுவாமி கோவில், 2ம் சங்கிலியின் சிலை, யாழ்ப்பாணக் கோட்டை நுழைவாயில், மந்திரிமனை (நல்லூர்)
Gislanka locator.svg
Red pog.svg
யாழ்ப்பாணம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.663897° N 80.015812° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்  - 0-10 மீட்டர்
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
அரச அதிபர் இமெல்டா சுகுமார்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்

 - 40000
 - +021 மற்றும் 060-221
 - NP
யாழ்ப்பாணம் (Jaffna, சிங்களம்: යාපනය) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது.[1] 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2]
1981இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் மக்கள்தொகை 118,000 ஆக இருந்தது. 20 ஆண்டுகளின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ்வாண்டில் இந்நகரின் மக்கள்தொகை 145,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லையென்றே சொல்லவேண்டும்.
1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் யாழ்நகரில், இந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

பொருளடக்கம்

பெயர்க்காரணம்

தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.
18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.
வேறு சிலர், நல்ல ஊர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள். எனினும் யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்தே யஹபனே, யாபாபட்டுன ஆகிய சொற்கள் மருவி வந்ததாகக் கொள்ளப்படுகிறது.

வரலாறு

தோற்றம்

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது.
1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.

போத்துக்கீசரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது.
உள்ளூர் மக்களின் குடியிருப்புக்கள் இக்காலத்திலும், பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இன்றைய கரையூர், பாசையூர் ஆகிய இடங்களை அண்டிச் சிறிய சிறிய மீன்பிடிக்குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது.
போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும், நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது

ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

ஏறத்தாழ 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன.
இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது என்று சொல்லமுடியும். பறங்கித் தெருப் பகுதியைத் தவிர, வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்ளூர் மக்களுக்குரிய பகுதிகளாக வளர்ச்சி பெற்றன.
இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான இந்துக் கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இது போன்றே, அடக்கி வைக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதமும் புத்துயிர் பெறலாயிற்று.

பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

பிரித்தானியர் காலத்தில் யாழ் நகர மக்களால் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம்
பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது எனலாம். தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவையே. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாயின.

ஆட்சி

யாழ்ப்பாண மாநகரசபை யாழ் நகரை ஆட்சி செய்கின்றது. இது 1865 மாநகர சபைகளின் அவசரச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிரித்தானியர் அதிகாரத்தைப் பகிர விரும்பாததால் யாழ் நகர் பல வருடங்களாக யாழ் நகர் மாநகர சபை தேர்வு செய்யப்படாமல் இருந்தது.[3] முதலாவது தெரிவு செய்யப்பட்ட மாநகர முதல்வர் கதிரவேலு பொன்னம்பலம் ஆவார்.[4]
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 11 வருடங்களின் பின் 2009 இல் இடம்பெற்றது. மாநகர சபை 29 உறுப்பினர்களைக் கொண்டது.[5]

யாழ்ப்பாண நூலகம்

1935ல் உருவான யாழ்பாண நூலகம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக விளங்கியது. 1981ல் நாசவேலையால் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் நாசமாகியது [6].

உள்நாட்டு போர்

புவியியல் மற்றும் காலநிலை

யாழ் ஏரியினால் நகரம் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. யாழ் தீபகற்பம் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு காணப்படுகின்றது. முழு நிலமும் தட்டையாகவும் கடலிலிருந்து உயர்ந்தும் காணப்படுகின்றது. பனை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. தளை அலரி போன்ற போன்ற மரங்களும் அதிகம் காணப்படுகின்றன.[7]
யாழ்ப்பாணம் வெப்பமண்டல மழைகாட்டு காலநிலையைக் கொண்டு மிக வறட்சியான காலநிலையுடைய மாதம் அற்றுக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் இலங்கையில் அதிகளவு சராசரி வெப்ப நிலையான 83 °F (28 °C)க் கொண்டுள்ளது. வெப்பம் ஏப்ரல், மே, ஆகஸ்து, செப்டெம்பர் மாதங்களில் உயர்ந்து காணப்படும். திசம்பர், சனவரி மாதங்களில் குளிர்ச்சியாகக் காணப்படும். வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் வருடாந்த கிடைக்கின்றது. இடத்துக்கிடம் வருடத்திற்கு வருடம் இது வேறுபடும். யாழ் தீபகற்பத்தின் மேற்குப் பகுதி சராசரி மழை வீழ்ச்சி 5 அங்குலம் ஆகும்.[7]
[மறை]தட்பவெப்ப நிலை தகவல், யாழ்ப்பாணம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 25
(77)
26
(79)
28
(82)
29
(84)
29
(84)
28
(82)
28
(82)
28
(82)
28
(82)
27
(81)
25
(77)
24
(75)
27
(81)
பொழிவு mm (inches) 70
(2.76)
30
(1.18)
20
(0.79)
50
(1.97)
40
(1.57)
10
(0.39)
20
(0.79)
30
(1.18)
60
(2.36)
230
(9.06)
380
(14.96)
260
(10.24)
1,270
(50)
ஆதாரம்: Weatherbase[8]

மக்கள் தொகையியல்

வரலாற்று அடிப்படையில் யாழ் நகரில் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர் வாழ்ந்து வந்தனர்.[9]
1880 முதல் 2010 வரையான சனத்தொகை[10][9][11][12]
ஆண்டு 1880 1891 1901 1911 1921 1931 1946 1953 1963 1971 1981 1994 2007 2010
சனத்தொகை 4,000 43,179 33,879 40,441 42,436 45,708 62,543 77,811 94,670 107,184 118,224 149,000 83,563 84,416
தரம்
2வது 3வது 2வது 2வது 2வது 2வது 3வது 3வது 3வது 4வது

14வது
மூலம் கணிப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணிப்பு கணிப்பு கணக்கெடுப்பு

யாழ் புறநகர்ப்பகுதி

புறநகர்
அரியாலை
சுன்னாகம்
நல்லூர்
சுண்டிக்குழி
நாவற்குழி
கோப்பாய்
கொக்குவில்
கோண்டாவில்
மண்டைதீவு
உரும்பிராய்
கைதடி

சமயம்

யாழ்ப்பாணத்தில் கிறித்தவ சமயம்

முதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

யாழ்ப்பாணத்தில் காணக்கூடிய இடங்கள்

வேலணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேலணை
Gislanka locator.svg
Red pog.svg
வேலணை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.685° N 79.908° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

வேலணை (Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

பொருளடக்கம்

பெயர் வரலாறு

வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது[1]. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது.[1] [2]. மேலும் கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்நாட்டு இளவரசன் வந்து தரையிறங்கி இடம் வேலணை என்றும் “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலில் மீ.ப.சோமு குறிப்பிட்டுள்ளார்.[3]

புவியியல் அமைவிடம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைக் கிராமத்தின் அமைவிடம்
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தென்மேற்காக உள்ள வேலணைத்தீவில் வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்மானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15சதுரகிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம் ஆகும்.

வானிலையும் காலநிலையும்

வானிலையும் காலநிலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலையுடன் ஒத்துக் காணப்படினும் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகவும் சோளக வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவும் மழைவீழ்ச்சி, பனித்தாக்கம் சற்றுக் குறைவாகவும் உள்ளது. சராசரி வெப்பநிலை 31OC யாகவும் மார்கழி-தை மாதங்களில் 29-30OC யாகவும் இருக்கும். மேலும் இங்கு கடலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் இரவு வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கின்றது. புரட்டாதி பிற்பகுதியில் இருந்து மார்கழி வரை கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சராசரி மழைவீழ்ச்சி 35-50மிமி இடைப்பட்டதாகும்.

வரலாற்று குறிப்புக்கள்

வரலாற்று ரீதியாக வேலணைக் கிராமத்தின் குடிசன வளர்ச்சியினை நோக்கின் இந்தக் கிராமம் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலேயே முக்கியம் பெற்று விளங்கியது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்தக்கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த ஊர்காவற்றுறை, கரம்பொன், நாரந்தனை போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலர் கத்தோலிக்க மதத்தினைத தழுவ, வேலணை மக்கள் சைவ சமயத்தவர்களாக விளங்கினர். பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கிராமத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1860-1875 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தாக்கிய வாந்திபேதி நோயினால் வேலணைக் கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தன.
மேலும் தமிழர்கள் வழிபட்டுவரும் கோவில்களிலே மிகப் புராதனமானவற்றில் வேலணை கிழக்கில் உள்ள வேலணை, பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலும் ஒன்று என்று கருதப்படுகின்றது. ஒல்லாந்தர் காலத்து பழமையான பத்திரங்களில் இருந்து தொகுக்கப்பட்டு ஆங்கிலேயரினால் சேமித்துவைத்திருக்கும் அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகளிலே இந்தக் கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளது. மேலும் பண்டுதொட்டு இந்தக் கோவிலிலே மிருகபலி இடப்பட்டு வழிபடும் வழக்கம் இருந்தாக அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன[2].

சமூகப்பிரிவுகள்

அரசியல்

அரசியல் தலைவர்கள்

பொருளாதாரம்

வேலணைக் கிராமத்தின் பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் பல நூற்றாண்டுகால முக்கியத்தும் பெறுகின்றது. பலதுறைப் பொருளாதாரம் இருந்தும் இங்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. அண்மைய தசாப்தங்களில் புகையிலைப் பயிர்ச்செய்கை வேலணைக் கிராமத்தின் மொத்த உற்பத்தில் பெரும் பங்குவகிக்கின்றது.

மக்கள் வாழ்க்கை முறை

மக்கள் தொகை

கோயில்கள்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள்

வேலணை வங்களாவடி முருகன் கோயில்
  • வங்களாவடி முருகன் கோவில்
  • சிற்பனை முருகன் ஆலயம்
  • வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோயில்
  • வேலணை துறையூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
  • ஆலயம்புலம் கந்தபுராண மரம்
  • தோபுரத்தடி ஞானவைரவர் கோவில்
  • செம்மணத்தி நாச்சியார் ஆலயம்
  • அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்
  • தெம்பக்குளம் நால்வர் மடம்
  • தனித்திரு அன்னம்
  • வேலணை மேற்கு பெரியபுலம் மாககணபதிப் பிள்ளையார் ஆலயம்
  • வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
  • பள்ளம்புலம் முருகமூர்த்தி திருக்கோவில்
  • வேலணை துறையூலட இலந்தை ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம்
  • மயிலைப்புலம் ஐயனார் ஆலயம்
  • செட்டிப்புலம் காளவாய்த்துரை ஐயனார் ஆலயம்
  • சாட்டி சித்தாத்திரை மாதா கோவில்
  • வேலணை வங்களாவடி அமெரிக்க மிஷன் தேவாலயம்

பாடசாலைகள்

துணை நூல்கள்

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமேகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். டொரண்டோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

குறிப்புகள்

  1. 1.0 1.1 இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு வெளியீட்டாண்டு-1989
  2. 2.0 2.1 மாணிக்கவாசகர், ச, வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் வெளியீட்டாண்டு-2006, வெளியீட்டாளர்-வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை
  3. மீ.ப.சோமு, வெண்ணிலவுப் பெண்ணரசி பதிப்பு:சென்னை,பாரி நிலையம், 1967

வெளி இணைப்புகள்

  • www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்
  • www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்
  • www.velanai.com - வேலணை மக்கள் ஒன்றியம்
  • www.velanaieast.com - வேலனை பெருங்குளம் முத்துகுமாரி அம்மன் ஆலயம் வேலனை
  • www.velanaicentralcollege.com -வேலணை மத்திய மகா வித்தியாலயம்
  • www.velanaimahakanapathi.com -வேலணை மகாகணபதிப்பிள்ளையார்

50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரத்தில் அடைந்து ரஷ்யா சாதனை


விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அடைவதற்கு இதற்கு முன்னர் வரை 50 மணி நேரம் தேவைப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு, பூமியின் சுற்றுவட்டப் பாதையை 30 முறை சுற்றி வந்த பின்னரே விண்வெளி நிலையத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.
ஆனால், ரஷ்யாவில் உள்ள பைக்கனோர் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து சமீபத்தில் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 3 வீரர்கள், ஆறே மணி நேரத்தில் தங்களின் இலக்கை அடைந்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த பவேல் வினோக்ரடோவ், அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் கேசிடி ஆகிய மூவரும் பூமியை 30 முறை சுற்றுவதற்கு பதிலாக 4 முறை மட்டுமே சுற்றிவிட்டு வளி மண்டலத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்து சுமார் ஆயிரம் மைல் மட்டும் பயணித்து 6 மணி நேரத்தில் இவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாகச பயணம் தொடர்பாக கருத்து கூறிய ரஷ்யாவின் தலை சிறந்த விண்வெளி வீரர் பவேல் வினோக் ரடோவ், ‘விண்வெளிக்கு செல்பவர்கள், பூமியில் இருந்து புறப்பட்ட 4-வது மணி நேரத்தில் உடல் பளுவை இழப்பது, சில உடல்நல உபாதைகளுக்கு உள்ளாவது போன்ற சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். அதன்பிறகு தொடர்ந்து 45 மணி நேரம் பயணம் செய்யும் வீரர்களில் சிலர் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
தற்போதைய புதிய சாதனையால் 6 மணி நேரத்தில் அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இறங்கி, உற்சாகத்துடன் பணியாற்ற முடியும். பூமியில் இருந்து ஐஸ் கிரீமை கூட கொண்டுச் சென்று உருகும் முன்னர் விண்வெளி நிலையத்தில் அமர்ந்து சாப்பிடலாம்’ என்றார்.

அமெரிக்காவில் பூசணிக்காயொன்றில் இராட்சத வினோத உருவச் சிலைகள்



அமெரிக்காவில் பூசணிக்காயொன்றில் இராட்சத வினோத உருவச் சிலைகள் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இக்காட்சியைக் கண்டவர்கள் தமது வியப்பையும், குதூகலத்தையும் வெளிப்படுத்துகின்றனர் என அதனை அமைத்த சிற்பவியலாளர் தெரிவிக்கிறார்.
இவ்வருடம் உற்பத்தி செய்யப்பட்ட பெரிய அளவிலான பூசணிகக்காயில் இவ்வாறான இராட்சத உருவம் அமைத்தனர். அமெரிக்காவின் தாவரப் பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் இராட்சத உருவங்கள் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் கவர்ச்சியானதென பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க சிற்பியான விலா பிரே என்பவரால் இவ்வாறான புதிய உருவமைப்பு பூசனிக்காயில் செய்யப்பட்டது பாராட்டக் கூடியதென தெரிவிக்கப்படுகிறது. இவ் வினோத உருவங்களை சிற்பவியலாளர் செய்வதற்கு 1683 கிலோ நிறையான இராட்சத பூசனிக்காயை பயன்படுத்தியிருக்கிறார்.
pumpkin_001
pumpkin_002
pumpkin_003

நாவிற்கு சுவையூட்டும் அருநெல்லிக்காய்

சிறுநெல்லி சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காய் நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது.
அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.
அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

கண் குறைப்பாட்டை நீக்க உதவும் சீப்ரா மீன்கள்


சீப்ரா மீன் எனப்படும் ஒரு வகை மீனின் உயிர் மரபணுக்கள் மனிதன் கண் விழித்திரையில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் சக்தி படைத்தவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த மீனில் இருந்து பெறப்படும் Stem cells எனப்படும் மரபணுக்கள் Retinas என அழைக்கப்படும் விழித்திரையில் பழுது படும் ஒளிக் கூம்புகளை (Cones) மறுபடி உற்பத்தி செய்வதன் மூலம் இழந்த பார்வைத் திறனை மீள வழங்கும் ஆற்றலுடையன எனக் கூறப்படுகின்றது.
நமது விழித்திரையில் காணப்படும் தண்டுகள் (Rods) மற்றும் ஒளிக் கூம்புகள் (Cones) என்பவையே படங்களைக் கிரகிக்கும் ஆற்றலுடைய Photoreceptors ஆகும்.
மனிதனின் கண்களில் Rods இரவில் பார்வைத் திறனையும், cones பகல் நேரத்தில் அனைத்து நிறங்களையும் உணரச் செய்யும் தன்மையையும் அளிக்கின்றன.
இது குறித்து அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டெட் அல்லிசன் கூறுகையில், நமது விழித்திரையில் உள்ள ஒளிக் கூம்புகளை (Cones) மட்டுமே Zebra மீனின் மரபணுக்கள் திரும்ப வழங்கக் கூடியன.
இதுவரை கிடைக்கபெற்ற மருந்துகள் யாவும் தண்டுகளை (Rods) மட்டுமே குணப்படுத்தும் தன்மையுடையன எனவும் தெரிவித்தார்.
மனிதனின் கண்ணுக்கு மிகவும் உபயோகமான ஒரு மருந்து முதல் தடவையாக ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதன் அடுத்த கட்டமாக இந்த சீப்ரா மீனில் பழுதான ஒளிக்கூம்புகளைத் திருத்தும் குறிப்பிட்ட ஜீனை (Gene) அடையாளம் காண்பதே எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

இமாச்சலப்பிரதேசம் உள் ளிட்ட வட மாநிலங்களில் இன்று பகல் 12.30 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அப்போது கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நில நடுக்கம் 10 வினாடி முதல் 15 வினாடிகள் வரை நீடித்தது. பாகிஸ்தானிலும் வாகா எல்லைப் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

நில அதிர்வின் தன்மை ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி இருந்தது. சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் இடெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

மே தினம் உருவான வரலாறு..


...

அமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல் 1835இல் பிலடெல்பியாவிலும் பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன் வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி,

சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள்

The Best New Samsung Android Phones

வணக்கம் நண்பர்களே..! மொபைல் உலகில் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்ததில், விலையில், தரத்தில் சிறப்பு பெற்றவை. சாம்சங் நிறுவனத்தின் போன்களின் பெயர்கள், அந்த போன்களின் படங்கள், அவற்றில் உள்ள மிக முக்கியமான உள்ளடக்க உறுப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

Samsung Galaxy Mega 6.3 Android mobile Phone


  • 6.5 inch hd touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.7 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8MP Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Mega 5.6 Android mobile Phone


Samsung Galaxy Mega 5.6 android mobile
  • 5.8 inch HD touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.4 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8 Mega Pixel Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Fame S6810 Android mobile Phone

கூகிள் ட்ரான்லிட்ரேசனைப் பயன்படுத்தி தமிழில் எழுத

How to type in Gamil
வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிமெயிலில் தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்ப முடியும். 

தமிழை தட்டச்சிட்ட உங்கள் ஜிமெயில் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பார்ப்போம். 

how to type tamil in gamil
முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டஃடைத் திறந்துகொள்ளுங்கள். வலது மேல் மூளையில் பற்சக்கரம் போன்ற படத்தை கிளிக் செய்யவும். இது செட்டிங்ஸ் ஐகான் எனப்படும்.

  • அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் Language என்பதில் நேராக உள்ள Show all language options என்பதைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது தோன்றும் விண்டோவில் Enable input tools என்பதில் 'டிக்' மார்க்கை ஏற்படுத்தவும். 
  • இப்பொழுது INPUT TOOLS என்ற விண்டோ தோன்றும். 
  • அதில் தமிழ் போனடிக் என்பதை டபுள் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் போனடிக் அமைப்புத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதியில் ஓ.கே கொடுத்துவிட்டு, செய்த மாற்றங்களை கீழே உள்ள Save Settings என்பதை அழுத்தவும். இப்பொழுது மாற்றங்கள் சேமிக்கப்பட்டுவிடும். 
இனி நீங்கள் உங்களுடைய Gmail-ன் முகப்புப் பக்கத்தில் மேல் வலது மூலையில் செட்டிங்ஸ் ஐகானிற்கு பக்கத்தில் இவ்வாறு கூகிள் லாங்குவேஜ் இன்புட் டூல் -ஐ காணலாம். 

அதைப் பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...