Jun 22, 2012

ஹலோ அம்மா நான் விமானத்துக்குள்ள இருந்துதான் பேசுறன் –

இனி விமானத்தில் போவோருக்கு எந்த விதக் கவலையும் இல்லை. காரணம் தங்களின் உறவுகளோடு எப்போதும் தொலைபேசித் தொடர்பில் இருக்கலாம். ஆம், முதன் முறையாக இதனை Virgin Atlantic என்ற பிரித்தானிய விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வணிகப் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் போன்றோர் மிகவும் பயனடைவார்கள்.
உலகின் முதன் முறையாக A330 என்ற லண்டனிலிருந்து நியூயோர்க் செல்லும் விமானத்தில் இருந்து தொலைபேசியில் பேசலாம், குறுந் தகவல் அனுப்பலாம், ஈ. மெயில் அனுப்பலாம். போன்ற எல்லா விதமான சேவைகளையும் அனுபவிக்க முடியும். இந்த வருட இறுதிக்குள் 20 விமானங்களில் இத்தகைய சேவையைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சேவையைப் பெற்று ஒரு நிமிடத்துக்கு தொலைபேசியில் பேச ஒரு ஸ்டேர்லிங் பவுண்கள் செலவாகின்றது.இதே நேரம் ஒரு குறுந்தகவல் அனுப்ப 20 சதமும் செலவாகின்றது. 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...