Jun 22, 2012

பிரஸ் அப்ஸ் பயிற்சி



நாற்காலியின் இரு கைப்பிடிகளையும். படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொண்டு மாறி மாறி அமர்ந்து எழ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாற்காலியில் அமர்ந்து விடக்கூடாது.
 
இந்தப்பயிற்சியால் கைகளின் பின் பக்கத்தசைப் பகுதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்தப்பயிற்சியைச் செய்ய வயது வரம்பு எதுவும் இல்லை.

மற்ற பயிற்சிகளைப்போல அல்லாமல் ஒரு முறைக்கு 15 எண்ணிக்கைகள் வீதம் 3 முறை செய்தால் போதுமானது.

தசைப்பயிற்சி

இந்த பயிற்சி பின்புறம் தசைப்பகுதி வலுவாக செய்யப்படுகிறது. நீர் நிறைந்த இரண்டு பாட்டில்களை கைக்கு ஒன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும். அருகில் ஒரு நாற்காலியை வைத்து பின்னர் வலது காலைப் பின் பக்கமாக மடித்து நாற்காலி இருக்கையின் மீது ஊன்றவும்.

பின்னர் வலது காலை பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டு இடது காலை மடித்து நாற்காலியில் ஊன்றுங்கள். இப்படி ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்வதால் கை மற்றும் பின் பக்கத் தசைப் பகுதிக்கு அழுத்தம் கிடைத்து தசை வலு பெறுகிறது. 

இந்த பயிற்சியை பெண்கள் தொடர்ந்து செய்து வந்தால் பின்புற அழகை பெறலாம். ஆனால் மூட்டு வலி உள்ளவர்களும்,  40 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த பயிற்சியைச் செய்ய வேண்டாம். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...