Jun 9, 2012

கை சுத்தம் காரணமாக நோய்த் தொற்று குறைந்துள்ளது



கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றைத் தடுக்க முடிகிறதுகைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றைத் தடுக்க முடிகிறது
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மருத்துவமனைகளில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை, அப்பகுதிகளில் சில மோசமான தொற்று
நோய்கள் மருத்துவமனைகளில் பரவிவந்த வேகத்தை கணிசமான அளவில் குறைத்துளது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
"கைகளை சுத்தம் செய்யுங்கள்" என்ற இந்த விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையின்போது மருத்துவமனைகளில் கைகழுவதற்கான கிருமிநாசினி சோப்புகள் மற்றும் திரவங்களின் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்ததாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது.
இதே காலகட்டத்தில் எம்.ஆர்.எஸ்.ஏ., சி.டிஃபிஸீல் போன்ற மோசமான வியாதிகளை உண்டாக்கக்கூடிய கிருமித் தொற்றுகள் மருத்துமனைகளில் பரவுவதென்பது பெரிதும் குறைந்துள்ளது.
மருத்துவமனைகளில் பரவும் இவ்விதமான தொற்று வியாதிகள் மருத்துவமனை செல்லும் பலருக்கு ஒரு சமயத்தில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருவனவாக இருந்தன.
2005ஆம் ஆண்டு இந்த விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையை பிரிட்டிஷ் சுகாதாரத் துறையினர் துவங்கியிருந்தனர்.
மருத்துவமனையில் ஒவ்வொரு படுக்கைக்கு அருகிலும் கையை சுத்தம் செய்வதற்குரிய கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டு "மறக்காமல் கையை சுத்தம் செய்துகொள்ளுங்கள்" என்று ஞாபகமூட்டும் பதாதைகளும் ஒட்டப்பட்டிருந்தன. மருத்துவ ஊழியர்களும் பார்வையாளர்களும் நோயாளிகளும் கைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டார்களா என்று உறுதிசெய்வதற்கான பரிசோதனை வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
2008ஆம் ஆண்டு பகுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மருத்துவமனை ஒவ்வொன்றும் தாங்கள் வாங்கிவந்த கிருமிநாசினி திரவத்தின் அளவு மூன்று மடங்காக அதிகரித்திருந்தது.
இந்த காலகட்டத்தில் மருத்துவமனை வருவதால் ஏற்பட்டுவந்த எம்.ஆர்.எஸ்.ஏ. கிருமித்தொற்று பாதி அளவுக்கு குறைந்துபோனது. சி.டிஃபிஸீல் கிருமித் தொற்றும் 40 சதவீதத்தால் குறைந்தது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் சுமார் பத்தாயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளதாக மதிப்பிடலாம் என இந்த ஆய்வு அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ராயல் ஃபிரீ யுனிவர்சிட்டி காலெஜ் என்ற லண்டன் மருத்துக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஷெல்டன் ஸ்டோன் கூறுகிறார்.
இந்த நடவடிக்கையினால் கிடைத்திருக்கும் ஊக்கத்தை தொடந்து முன்னெடுத்துச் சென்று கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் வியாதிகள் பரவாமல் தடுக்கின்ற விஷயத்திலே உலகின் முன்னணி நாடாக பிரிட்டன் திகழ வேண்டு என இவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...