Jun 9, 2012

உடற்பருமனால் பாதிக்கப்படுவோர் அதிகம்: சுகாதார ஸ்தாபனம்



12 வீதமானோர் உடற்பருமன் கொண்டவர்கள்உலகில் 12 வீதமானோர் உடற்பருமன் கொண்டவர்கள்
உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.
தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற
புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நிலைமைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.
மக்கள் கூடுதலாக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொண்டு, குறைவான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் மக்கட் தொகையில் 12 சதவீதமானவர்கள் உடல் பருமனுடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
இதேவேளை, குழந்தை பேறு காலத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள் இப்போது பெருமளவில் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதே போல தடுப்பூசி போடுவது போன்ற முன்னெடுப்புகளால் சிறார்களின் உயிரிழப்பு வீதமும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...