Jun 9, 2012

வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்


சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடையவிருக்கும் முதலாவது வணிக ரீதியிலான விண்கலமாக, ஆளில்லா விண்கலம் ஒன்று அமைகிறது.
மணிக்கு 27,000 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் இந்த தனியாருக்கு சொந்தமான டிராகன் விண்கலத்தை, விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் அதனது இயந்திரக் கைகள் மூலம் விண்வெளிநிலையத்துடன் இணைத்துக் கொள்வார்கள்.
கடந்த வருடத்தில் நாசா அமைப்பு தனது விண்கலத் திட்டங்களை கைவிட்ட பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
தாம் செவ்வாய்க்கான பயணத்திட்டம் போன்றவற்றில் கவனத்தைக் குவிக்க ஏதுவாக இருக்கும் என்பதால், இப்படியான தனியார் நிறுவன விண்கல திட்டங்களை அமெரிக்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...