Jun 9, 2012

பிரஞ்சு ஓபன் பட்டம் வென்றார் மரியா ஷரபோவா


வெற்றிக் கோப்பையுடன் மரியா ஷரபோவாரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா 2012ஆம் ஆண்டின் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் சாம்பியனாகியுள்ளார்.

இந்த பட்டத்தின் மூலம் உலகின் நான்கு முன்னணி டென்னிஸ் போட்டிகளையும் வென்ற உலகின் பத்தாவது பெண் என்ற சாதனையையும் ஷரபோவா எட்டியுள்ளார்.
25 வயதாகும் ஷரபோவா, மகளிர் ஒற்றையர்
இறுதியாட்டத்த்தில் இத்தாலியின் சாரா எர்ரானியை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
விம்பிள்டன் போட்டியை மிக இளம் வயதிலேயே வென்ற ஷரபோவா அதன் பின்னர் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் யு.எஸ். ஓபன் போட்டிகளை வென்றுள்ளார். பிரஞ்சு ஓபன் பட்டம் அவரை விட்டு விலகியே இருந்தது.
ஆனால் இன்றைய வெற்றியின் மூலமாக கரிர் கிராண்ட் ஸ்லாம் வென்ற வீராங்கனையாக ஷரபோவா சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்த வெற்றியோடு உலகத் தரவரிசையில் முதலிடத்தையும் அவர் மீண்டும் எட்டிப் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...