Aug 29, 2012

14,000 கி.மீ., சென்று தாக்கும் ஏவுகணையை சீனா பரிசோதித்தது


missle_29 பீஜிங்: கண்டம் விட்டு கண்டம் பாயும், அதி நவீன, 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஏவுகணையை சீனா, நேற்று பரிசோதித்தது. வல்லரசு நாடான சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு போட்டியாக அதி நவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. கடலுக்கு அடியில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரி நாட்டை தாக்கும் வகையிலான ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து பார்த்தது சீனா. இந்நிலையில், “டோங்பெங்-41′ என்ற 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று பரிசோதித்தது. இந்த ஏவுகணை 10 அணுகுண்டுகளை சுமந்து செல்லும் வல்லமை பெற்றது. ஏவுகணை படை பிரிவில் பெண்கள் குழுவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக, சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை தாக்கும் வகையில் இலக்காக கொண்டு இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...