Aug 29, 2012

சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு

விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி

தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு இயான் என்ற புத்தம் புதிய சிறிய காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர்களை இயான் தன் பக்கம் இழுத்தது. இருப்பினும் பழகிப் போன தோற்றத்தால் சான்ட்ரோ கார், வாடிக்கையாளரை கவரவில்லை.

இயான் வந்துவிட்டதால் சான்ட்ரோவில் பெரிய மாற்றங்களை செய்யவும் ஹூண்டாய் விரும்பவில்லை. இதனால், சான்ட்ரோவின் விற்பனை மாதாமாதம் குறைத்து வருவதால், அந்த காரின் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சான்ட்ரோ கார் பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3.48 லட்சம் முதல் ரூ.4.63 லட்சம் வரையிலான விலையில் சான்ட்ரோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...