Aug 29, 2012

ரூ.6100 கோடியில் ரெடியாகிறது விண்வெளி டாக்சி: நாசா


நாசா: விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் ‘ஸ்பேஸ் டாக்சி’ தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு நாசா ஆய்வு நிறுவனம் ரூ.6,100 கோடி வழங்கியிருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ 35 ஆண்டுகளாக விண்வெளிக்கு விண்கலங்களை இயக்கி வருகிறது. என்டர்பிரைஸ், கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டேவர் ஆகிய விண்கலங்கள் இயக்கப்பட்டு வந்தன. விண்வெளிக்கு செல்லும்போது ராக்கெட் போல இயக்கப்படும். விமானம் போல

தரையிறங்கும். பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இவற்றுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக நாசா சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. 2010&ம் ஆண்டு முதல் இந்த ரக விண்கலங்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டது. அட்லான்டிஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 8&ம் தேதி தரையிறங்கியது. இதுதான் விண்கலத்தின் கடைசி பயணம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) வீரர்களை அழைத்து செல்லும் வகையில் புதுவித வாகனம் (விண்வெளி டாக்சி) தயாரிக்க நாசா ரூ.6100 கோடி ஒதுக்கியிருக்கிறது. போயிங், ஸ்பேஸ் எக்ஸ், சியரா நெவாடா ஆகிய நிறுவனங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. போயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் விண்வெளி ஓடங்கள், கேப்சூல்கள் தயாரித்து வருகின்றன. ராக்கெட் போல செங்குத்தாக பறந்து சென்று, விமானம் போல படுக்கைவாக்கில் தரையிறங்கும் வகையை சேர்ந்த ‘ட்ரீம் சேஸர்’ ஸ்பேஸ் பிளேன் வாகனத்தை சியரா நெவாடா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...