Aug 26, 2012

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியது கியூரியாசிட்டி



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.இந்த விண்கலம் 9 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்தில் 10 விதமான அதி நவீன கருவிகள் உள்ளன.
கியூரியாசிட்டி விண்கலம் 6 மீ்ற்றர் அளவுக்கு முன் நோக்கியும், பின்நோக்கியும் நகர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
அதில் கதிர்வீச்சு போன்ற வெளிச்சமும், அடையாளம் காண முடியாத பொருள் மிதப்பது போன்றும் உள்ளது. எனவே அது பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் விண்கலத்தில் உள்ள லேசர் கருவிகள் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் 500 புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
அவற்றின் பின்புறம் மிகவும் தெளிவாக தெரிகிறது. லேசர் கருவிகள் தற்போதுதான் முதன் முதலாக செயல்பட தொடங்கியுள்ளது. இது சரியாக, துல்லியமாக செயல்படுகிறது என செவ்வாய்க்கிரக ஆய்வு திட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...