Aug 26, 2012

உலகம் உங்கள் கையில்

புதிய ஏவுகணை

world is in your handசீனா தயாரிப்பு
வாஷிங்டன்: நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவத்தக்க, கண்டம் விட்டு கண்டம் தாவிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா தயாரித்துள்ளது. இது 10 அணுகுண்டுகளை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ராணுவ மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.நீண்ட தூரம் (12,000 முதல் 14,000 கி.மீ.) சென்று இலக்கை தாக்கக் கூடிய டாங்பெங்,41 என்ற ஏவுகணையை சீனா தயாரித்துள்ளது. இவற்றை ஏவுவதற்கு முன்பு, கண்டுபிடித்து அழிப்பது கடினமானது. இது தனித்தனி இலக்குகளை தாக்கக்கூடிய 1 முதல் 10 அணு அயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது.சீனா இதுவரை 55 முதல் 65 ஏவுகணைகளை தயாரித்து
வைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவை குறைத்து மதிப்பிட்டுள்ளன. ஏவுகணைகளில் அணு ஆயுதங்களைப் போல போலியாக தோன்றக்கூடிய கருவிகளையும் சீனா தயாரித்துள்ளது. உஷ்ணம் மற்றும் மின்காந்த உணர்வு அமைப்புகளை கொண்ட இது, ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை ஏமாற்றிவிட்டு இலக்கை சரியாகத் தாக்க உதவும். இதுமட்டுமின்றி தலா 12 ஏவுகணைகளை தாங்கிச் செல்லக்கூடிய 2 நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா தயாரிக்கிறது.சீனாவின் இந்த வகை ஏவுகணைகளை கண்டறிய வசதியாக நவீன உயர் தொழில்நுட்பம் கொண்ட ராடார்களை தெற்கு ஜப்பானிலோ தென் கிழக்கு ஆசியாவிலோ நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீதான விமர்சனங்கள்
இடைத்தேர்தலுக்கு பின் மறையும்

கொழும்பு: இலங்கை அரசு மீதான விமர்சனங்கள், 3 மாநிலங்களின் இடைத்தேர்தலுக்கு பின் மறைந்து விடும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறினார்.இலங்கையில் உள்ள 9 மாநிலங்களில் வடக்கு, மத்திய மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் அடுத்தமாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலங்களில் நேற்றுமுன்தினம் அவர் பேசுகையில், இனவாதம் தலைதூக்க நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கையில் 3 இனங்களை சேர்ந்த மக்களும் நன்றாக இருக்க வேண்டும். பிரிவினைவாதிகளால் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு உலக நாடுகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டதாக பழி சுமர்த்தப்பட்டுள்ளது. இதற்கு 3 மாநில மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்  என்றார்.

அமெரிக்க விமான தாக்குதலில்
ஹக்கானி முக்கிய தலைவர் பலி

இஸ்லாமாபாத்: அல்,கய்தாவுடன் தொடர்புடைய ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் கமாண்டராக இருந்த பத்ருதின் ஹக்கானி மற்றும் பாகிஸ்தானில் உள்ள தலிபான் உயர் கமாண்டர் முல்லா தத்துல்லா ஆகியோர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.பாகிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹக்கானி தீவிரவாத இயக்க தலைவர் ஜலாலுதின் ஹக்கானியின் மகனான பக்ருதின் ஹக்கானி இறந்தார்.இதே சமயத்தில் குணார் மாகாணம், ஷிங்கல்வா ஷெல்டன் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் தெஹ்ரிக் ,இ, தலிபான் தீவிரவாத அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் முல்லா தத்துல்லா உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் உள்ள கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...