Aug 26, 2012

வெந்தயத்தின் மகிமை


உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்குறவங்க, வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறையும். ரத்தத்துல குளுக்கோசோட அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கு.
`டையோஸ்ஜெனின்’ என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால்
உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் இருக்குறதால, பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய உணவுகளைக் கொடுப்பாங்க. ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தா, நல்லா பசியெடுக்கும். தலையில பொடுகுத்தொல்லை இருக்குறவங்க, வெந்தயத்தை அரைச்சு, தலையில தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். இப்படிப் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக வெந்தயம் பயன்படுது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...