Aug 26, 2012

கப்பல்களை உள்ளிழுத்த பெர்முடா பகுதியில் பறந்த பறவைகள் மாயம்: நீடிக்கும் மர்மம்

அட்லாண்டிக் கடலின் மர்ம பகுதிக்குள் செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாகி வருகின்றன. தற்போது பறவைகளும் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டிரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது.
இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிகளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது அப்பகுதியில் பறக்கும் பறவைகளும் காணாமல் போகின்றன.
இதற்கு இங்கு அளவுக்கு அதிகமான பேய் மழை, சூரிய சக்தியின் தாக்கம் மற்றும் ஈர்ப்பு விசையும் காரணம் என கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் இருந்து புறா போட்டியாளர்கள் திர்ஸ்க், வெதர்பி, கான்செட் ஆகிய பகுதிகளில் இருந்து 232 புறாக்களை பறக்க விட்டனர். ஆனால் அவற்றில் 13 புறாக்கள் மட்டுமே திரும்பி வந்தன. மற்றவை மாயமாகி விட்டன.
எனவே காணாமல் போன புறாக்கள் பெர்முடா பகுதியில் கடலுக்குள் உள்ளே இழுக்கப்பட்டிருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நீண்டதூரம் பறக்க முடியாமல் பல புறாக்கள் கடலுக்குள் விழுந்து இறந்து இருக்கலாம் அல்லது வேறு இடங்களில் தங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இருப்பினும் பெர்முடா பகுதியின் மர்மம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...