Sep 22, 2012

பாதுகாப்புக்கு 12,000 போலீசார் 185 விநாயகர் சிலைகள் கரைப்பு


சென்னை: சென்னையில் கடந்த 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த சிலைகளில் 185 சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சிவசேனா(குமாரராஜ பிரிவு) கட்சியைச் சேர்ந்தவர்கள்

புளியந்தோப்பு, பெரம்பூர் ஆகிய இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை காசிமேடு கடலிலும், வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த எம்.கே.ராஜா தலைமையிலான அமைப்பினர் வைத்திருந்த விநாயகர் சிலைகளை நீலாங்கரை பல்கலை நகரிலும் கடலில் கரைத்தனர்.  இந்து மக்கள் கட்சி(ஸ்ரீதரன் பிரிவு) யினர் திருவல்லிக்கேணி, எழும்பூர், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் வைத்துள்ள சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் இன்று கரைக்கப்படுகிறது. கணேஷ் மண்டல் என்பவர் வைத்துள்ள சிலைகளும் கடலில் கரைக்கப்படுகிறது. மேலும் சென்னை நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சிலைகள், அரசு அறிவித்துள்ள 6 இடங்களில் கடலில் கரைக்கப்படுகிறது.  பாரத் இந்து முன்னணி, பாரதமாதா விநாயகர் சதுர்த்தி கமிட்டி, சிவசேனா(ராஜேந்திரன்) ஆகிய அமைப்பினர் சுமார் 70 சிலைகளை கடலில் கரைக்கிறார்கள். இதையொட்டி 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சஞ்சய் அரோரா, அபய்குமார் சிங், இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், ரவிக்குமார், செந்தாமரைக்கண்ணன் ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலில் சிலைகளை கரைக்கும் இடத்தில் கிரேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...