Sep 22, 2012

அமெரிக்க சினிமாவுக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் பயங்கர கலவரம் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து, பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று ஊர்வலங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. பாகிஸ்தானிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் நபிகள் நாயகம் தினத்தை கொண்டாட பாகிஸ்தானில் நேற்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், திரைப்படத்துக்கு மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த கூடாது என்று அழைப்பு விடுத்தார். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில், திரைப்படத்தை கண்டித்து நேற்று பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சினிமா தியேட்டர்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு இடங்களில் சமூக விரோதிகள் கடைகளில் பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.

சாலையில் செல்லும் கார்களை அடித்து நொறுக்கினர். பெட்ரோல் பங்க்குக்கு தீ வைத்தனர். சாலைகளில் டயர்களை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். லாகூரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கோஷங்கள் எழுப்பியபடி முற்றுகையிட்டனர். இதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், தூதரக அதிகாரிகளின் வீடுகளை நோக்கி நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களும் ஊர்வலம் சென்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. கராச்சியில் நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது வன்முறை ஏற்பட்டதில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 14 பேர் பலியாயினர். பெஷாவரில் நடந்த கலவரத்தில் டிவி ஊழியர் உள்பட 6 பேர் பலியாயினர். இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், ராவல்பிண்டி நகரங்களில் ஏற்பட்ட மோதலில் மொத்தம் 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரம் நடந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...