Sep 22, 2012

தெலங்கானா மாநிலம் உருவாக்கினால் காங்கிரசுடன் கட்சியை இணைக்க சந்திரசேகர ராவ் திட்டம்? சோனியாவுடன் இன்று ஆலோசனை


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி: தெலங்கானா தனி மாநில விவகாரம் தொடர்பாக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என தெலங்கானா பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஐதராபாத்தில் வரும் 29ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என தெலங்கானா போராட்ட குழு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச
பயோ டைவர்சிட்டி மாநாடு அங்கு நடக்க உள்ளதால் மாநாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மாநில கவர்னர் நரசிம்மன் நேற்று டெல்லி வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்தார். இன்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். தெலங்கானா உருவாக்கினால் தங்கள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வயலார் ரவியை அவர் இரு முறை சந்தித்தார். இந்நிலையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கிறார். தெலங்கானா பகுதி மக்களின் ஆதரவை பெறுவதற்காக தெலங்கானா உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...