Sep 2, 2012

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு!!! பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும். ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது. இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு

பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும்.

ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.

இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...