Sep 2, 2012

இருதய நோய் (மாரடைப்பு) – ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை


நான் கடந்த 10.11.2011அன்று காலை ஏழே கால் மணி அளவில் செய்தித்தாள்கள் படித்து கொண்டிருந்தேன்.  இடது  தோளில் வலி இருந்து முன் கை வரை பரவியது.  உடல் முழுக்க வேர்த்த்து.  உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனை சென்று ஊசி போட்டு இ.சி.ஜி. எடுத்தோம்.  அந்த மருத்துவர் உடனடியாக இருதய மருத்துவ மனைக்கு செல்ல சொன்னார்.  நாங்கள் எங்களது குடும்ப மருத்துவரும் இருதய மருத்துவருமான டாக்டர் திரு கே.காமராஜ். எம்.டி. சிவகாசி அவர்களை பார்க்க சென்றோம்.  காலை ஒன்பதே கால் மணிக்கு சிவகாசி சென்று விட்டோம்.  (அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours).  அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார்.  நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது.  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும்,  மனமார்ந்த வாழ்த்துகளும்.  அவரது சேவை பெரிதும் பெருகட்டும். 

வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம்
 மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து,  இப்போது ஏழை பணக்காரன்,  ஜாதி, மதம், சின்னவர், பெரியவர் என பாகுபாடின்றி இனறளவில் விஸ்வரூபமாய் இருக்கும் ஹார்ட் அட்டாக் எனும் அழையா விருந்தாளி தான். ஆம் ஹார்ட் அட்டாக் 87% சதவிகித மக்களுக்கு எப்பொழுது  வரும் என தெரியவே தெரியாது. முக்கால்வாசி பேர் ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் (அறிகுறிகள்) கொஞ்சமும் தெரியாமல் சிலர் கை வலி,  சிலருக்கு வாயுத் தொல்லை எனவும்,  சில பேர் உஷ்ணத்தால் வியர்க்குது என நினைத்து ஹார்ட் அட்டாக்கில் மரணிப்பது ஒரு தினம் தோறும் நடக்கும் நிகழ்ச்சி. 13% சதவிகித மக்கள் தூக்கத்திலேயே என்ன நடக்குது என தெரியாமல் இறந்து போகின்றனர். சிலர் மட்டும் அதை சரியாக கவனித்து சரியான நேரத்தில் மருத்துவமனை செல்வதால் அந்த "கோல்டன் ஹவர்ஸ்" எனும் நேரத்திற்குள் அவர்கள் காப்பாற்றப்பட்டு செகண்ட் அட்டாக்,  மூன்றாவுது , நான்காவது அட்டாக் வரை தாங்குகின்றனர்.  ஹார்ட் அட்டாக் தவறான உணவு பழக்க வழக்கம்,  உடற்பயிற்சியின்மை,  அதிக பருமன் ஆட்களுக்கு மட்டும் தான் வரும் என கூறுவது தவறு. சிலருக்கு வம்சா வழி பிரச்சினைகள்,  சில ஷாக்கிங் செய்திகள்,  அதிக ஸ்ட்ரெஸ் எனப்படும் ஒரு நவீன பிரச்சினை மூலமாகவும் இந்த ஹார்ட் அட்டாக் வருவதுண்டு. ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக்,  பைபாஸ் சர்ஜரி,  ஆஞ்ஜியோ பிளாஸ்ட்,  ஸ்டென்ட்,  வால்வு ரீபிளேஸ்மென்ட்,  ஃபேஸ்மேக்கர் எல்லாம் ஏதோ அன்னிய சக்திகள் மாதிரி கேட்ட நாம் இதை இப்பொழுது ஒரு டிரென்டாகி போனாலும் ஒரு தடவை அட்டாக் வந்தவர்கள் மிகவும் பாதுகாப்பாகி அதன் சிந்தனையுடன் தன்னை பேணி காக்கின்றனர். இது ஒரு உலக அளவில் பேசப்படும் ஒரு விஷயம். இந்தியாவில் இந்த நோய் விழிப்புணர்வு மிகவும் மோசம். இதில் பிழைப்பவர்களை விட இறப்பவர்கள் தான் மிக அதிகம். ஆம் இந்த நோய்க்கு காரணம் நாம் இதை பற்றி முதல் அட்டாக் வரும் வரை நாம் அதை பற்றி கவலைப் படுவதில்லை.   ஆம் 25 வயதுக்கு மேல் எல்லா ஆண் பெண்ணும் கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் செய்து அதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது - LDL Bad Cholestrol - கெட்ட கொலஸ்ட்ரால்,  Triglycerides - டிரைகிளைசிரய்ட்ஸ்,  Diabates - I - II டயாபட்டீஸ் மற்றும் Blood Pressure -  ரத்த கொதிப்பு.  இது நான்கும்  தெரிந்தால் ஒரளவுக்கு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் பற்றி அதன் தாக்கம் உங்களுக்கு இருக்கிறதா என்று டாக்டரின் உதவியோடு தெரிய வரும். இதை நாம் ஏனோ செய்வதில்லை அதற்கு மாறாக ஒரு அட்டாக் வந்த பிறகு அந்த குடும்பம் படும் அவஸ்தை சொல்லி தெரிவதில்லை

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...