Sep 2, 2012

இருதய ஓட்டையை சரி செய்ய முடியுமா?

இருதய ஓட்டையை சரி செய்ய முடியுமா?
இருதயத்தில் ஒட்டை என்பது, பிறவியில் இருந்து ஏற்படும் வியாதி. இது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இருக்கலாம். இது தவிர எந்த இடத்தில் ஓட்டை, மேலிரண்டு அல்லது கீழிரண்டு பாகங்களுக்கிடையே இருந்தால் ஆபரேசன் மூலமோ அல்லது ஞிணிக்ஷிமிசிணி சிலிளிஷிஹிஸிணி  முறையிலோ எளிதில் சரி செய்யலாம். ஆனால் வேறு முக்கிய இடங்களில் இருந்தாலோ அல்லது ஓட்டையுடன் வேறு கோளாறுகள் இருந்தாலோ, கடினமான ஆபரேசன் தேவைப்படும். இந்த ஓட்டையால், நுரையீரலில் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால் நோயாளி ஆபரேசன் செய்யும், கட்டத்தை தாண்டிவிட்டார் என்று அர்த்தம். எனவே, நோயாளிக்கு எந்த இடத்தில், எந்தளவு ஓட்டை உள்ளது என்பதை பொறுத்தே, சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

எனக்கு பைபாஸ் ஆபரேசன் செய்து 15 ஆண்டுகளாகிறது. பைபாஸ் ஆபரேசனுக்குப் பிறகு 10 ஆண்டுகள் தான் உயிருடன் இருக்க முடியும் என பயமுறுத்துகின்றனர். தங்கள் அறிவுரை தேவை?
மருத்துவரின் பதில்: இருதய ரத்த நாளத்தில் இருக்கும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ, ரத்த நாளத்தை எடுத்து, சரி செய்வது பைபாஸ் ஆப்பரேசன் நெஞ்சில் இருந்து எடுக்கும் ரத்த நாளத்தை லிமிவிகி நிஸிகிதிஜி என்பர். இந்த லிமிவிகி நிஸிகிதிஜி  பொருத்தப் பட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் முடிந்த பின்புறம் 90 சதவிகிதம் அடைப்பு ஏற்படாமல் உள்ளது. ஆனால் காலில் இருந்து எடுக்கப்படும் ஷி.க்ஷி.நி. நிக்ஷீணீயீ 10 ஆண்டுகளில் 50 சதவிகிதம் மூடி விடுகிறது. ஆகையால், எந்த இடத்தில் இருந்து நிஸிகிதிஜி எடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்தே. நீண்ட கால இருதய ஆரோக்கியம்  நிர்ண யிக்கப்படுகிறது. எனவே, உங்களுக்கு முதலில் டிரெட்மில் பரிசோதனை செய்வது அவசியம். இதில், நார்மல் என முடிவு வந்தால் அனைத்து கிராப்டும், நன்கு உள்ளது என்று அர்த்தம். டிரெட்மில் பரிசோதனையில் கோளாறு இருந்தால், மறுபடியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, கிராப்டில் அடைப்பு இருந்தாலே அல்லது உங்கள் சொந்த ரத்தக்குழாயில் அடைப்பு அதிகரித்து இருந்தாலோ அதற்கேற்ப ஸ்டென்ட் (ஷிமீஸீ) சிகிச்சை முறையில் சரி செய்யலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...