Oct 13, 2012

பாகிஸ்தானில் மீண்டும் அத்துமீறல் அமெரிக்க டிரோன் தாக்குதல் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்க டிரோன்கள் நேற்று மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்க, ஆளில்லாத உளவு விமானம் டிரோன் மூலம் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்படுகின்றனர். மேலும், பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், டிரோன் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தவில்லை. பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் நேற்று டிரோன் தாக்குதல் நடந்தது.
ஒராகாசி என்ற இடத்தில் புலந்த் கேல் பகுதியில் பழங்குடியினத்தவர்கள் தங்கியுள்ள பகுதியில் நடந்த தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஹக்கானி மற்றும் அல் கய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். டிரோன் தாக்குதலை கண்டித்து தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் சமீபத்தில் மாபெரும் பேரணி நடத்தினார். அதன்பிறகு அமெரிக்கா 2வது முறையாக டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். டிரோன் தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர். இதனால் இரு நாட்டு உறவில் தொடர்ந்து நெருக்கடி நிலவுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...