Oct 13, 2012

பூமியை விட பெரிய வைரங்கள் நிறைந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

October 13, 2012
வானில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை இரவில் வைரம் போல் ஜொலிப்பதை காணலாம். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கால்பந்து போன்ற சிறிய வடிவிலானவை. ஆனால் சமீபத்தில் அமெரிக்க பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அளவை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட்
எனப்படும் கனிமத்துடன் வைரம் நிறைந்த கிரகமாக இது உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
55 கேன்க்ரி என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் சுற்றளவு பூமியைவிட 2 மடங்கு பெரியது. அடர்த்தியோ 8 மடங்கு அதிகமானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதைந்து கிடக்கும் படிமப்பாறைகளை போல் உறுதியானதாகவும் இந்த கிரகம் உள்ளது. பிரான்சில் உள்ள நிறுவனம் ஒன்று, இந்த கிரகத்தின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது, பூமியை போன்ற சுற்றளவு கொண்ட பகுதி முழுவதுமே வைரமாக இருக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...