Oct 13, 2012

புவியின் நிலத்துக்கு அடியில் எவ்வளவு தூரம் செல்லலாம்? : புதிய முயற்சியில் மனிதன்

மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான்.
ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,

அதாவது கடலுக்கு அடியில் சுமார் 6 Km தூரத்துக்கு நிலத்தைத் தோண்டி பூமியின் சூடான அடர்ந்த சிலிக்கேட் பாறைகளால் சூழப்பட்ட பகுதி (mantle) அதாவது பூமியின் மையத்துக்கும் மேலோட்டுக்கும் இடையில் (interior between the

crust and the core) உள்ள பிரதேசத்துக்குச் செல்லவுள்ளனர்.


மேலும் அங்கு காணப்படும் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சுவடுகளையும், பாறை, மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளனர். இம்மாதிரிகள் மூலம் புவியின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த மிகப் பெரிய சவாலான கேள்விகளுக்கு விடை காண முடியும்.


இச் செயற்திட்டத்தின் கடினத் தன்மை காரணமாக அது புவியியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான மைல்கல் என அழைக்கப் படுகின்றது. ஜப்பானை அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட இருக்கும் இச் செயற்திட்டம் இன்னும் 10 வருடங்களுக்குள் முடிவடையும் எனவும் 2020 தொடக்கத்தில் புவியின் உள்ளகத்துக்கு மனிதனால் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...