Oct 13, 2012


ரஷ்யா: எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலி
ரஷ்யாவில் எண்ணை கிணறு கடலில் மூழ்கி 53 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் வடமேற்கு பகுதியில் முர்மானஸ் மாகாணத்தில் ஒகாட்ஸ்க் கடல் உள்ளது.இங்கு கொல்ஸ்கயா என்ற இடத்தில் கடலுக்குள் எண்ணை கிணறு உள்ளது.

இந்த எண்ணை துரப்பன பணியில் அதில் 67 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் 53 பேர் நிபுணர்கள், 14 பேர் தொழிலாளர்கள்.வழக்கம் போல் இவர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் கடும் புயல் வீசியதில், எண்ணெய் கிணற்றின் மேடை கடலுக்குள் விழுந்தது. இதில் பணியில் இருந்த 67 பேரும் கடலில் மூழ்கினர். அவர்களில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.இவர்கள் தவிர 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 49 பேரை காணவில்லை.

அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...