Oct 12, 2012

பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டி

சென்னை,அக்.13-
 
பல நோய்களுக்கு விரைவில் மருந்து: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சென்னையில் பேட்டிபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜூல்ஸ் ஏ.ஹாப்மன். இவர் அங்கு உள்ள ஸ்ட்ராபர்க் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் ஜெர்மனியில் உயர் படிப்பு படித்து மீண்டும் தான்படித்த அதே பல்கலைக்கழகத்தில் மாலிக்குலர் செல் பயாலஜி துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அவர் பழ ஈயில் புரோட்டீனை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதன் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கான தொடக்க நிலையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு கடந்த வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
அவர் இந்தியாவில் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி குறித்து சொற்பொழிவாற்றி வருகிறார். நேற்று அவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதன் பயன்பாட்டால் மனிதர்களுக்கு என்ன நன்மையை ஏற்படுத்தலாம் என்றும் பேசினார்.
 
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், 'இன்றைய உலகில் தொற்றுநோய்கள், இருதயநோய்கள், ஓவ்வாமை உள்ளிட்ட பல நோய்கள் மனிதனை அதிக இன்னலுக்கு ஆளாக்கின்றன. நோய் வராமல் தடுத்தலே சிறந்ததாகும். நான் பழ ஈ யை ஆராய்ச்சி செய்ததில் அதற்கும் மனிதனுக்கும் இடையே 345 புரோட்டீன் மாலிக்யூல்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே என்னுடைய கண்டுபிடிப்பின் பயனாக மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உருவாக்கி, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். இதை விரைவில் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கலாம். நானும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்’ என்றார்.
 
பேட்டியின்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜ், அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மைய தலைவர் பேராசிரியர் கே.சங்கரன், பேராசிரியர் எஸ்.அனுராதா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...