Oct 12, 2012

ஜனாதிபதி போட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ரிபப்ளிக்கன் வேட்பாளர் முன்னிலை

ஜனாதிபதி போட்டியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ரிபப்ளிக்கன் வேட்பாளர் முன்னிலை
அமெரிக்காவில் வரும் நவம்பர் 6 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளார்களாக ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஓபாமாவும், எதிர்கட்சியான ரிபப்ளிக்கன் கட்சிச் சார்பாக மிட் ரோம்னியும் களத்தில் இருக்கின்றனர்.

அவர்கள் இருவரின் நேரிடையான தொலைக்காட்சி விவாதம் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. விவாத அடிப்படையில்  இணையதளம் மூலம் நடத்தப்படும் வாக்கெடுப்பில், மிட் ரோம்னிக்கு 47% வாக்குகளும், அதிபர் பராக் ஓபாமாவிற்கு 44% வாக்குகளும் கிடைத்துள்ளதாக அந்த கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதில் ரிபப்ளிக்கன் கட்சியின் வேட்பாளாரான மிட் ரோம்னியே மூன்று புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார். இது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...