Sep 30, 2012

600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்பு




[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012,
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே சரியாக மூடப்படாத 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அடுத்து தேன்கனிகோட்டை அருகே ஜவலகிரி கிராமத்தில் ஒரு விவசாயி 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.
தனது பணி முடிந்தும் அதனை சரிவர மூடாமல் சாணல் சாக்கினால் அரைகுறையாக மூடி வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குணா என்ற 3வயது சிறுவன் ஆள்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்து விட்டான். இந்த விடயம் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவனை மீட்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
2ம் இணைப்பு:
ஜே.பி.சி இயந்திரம் மூலம் தோண்டும் பணிநடந்தது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குணா உயிருடன் மீட்கப்பட்டான். தற்போது ஒசூர் மருத்துவமனையில் அவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...