Sep 30, 2012

அணிசேரா நாடுகள் சேர்ந்த அணி

உலகில் முதல் பெண் பிரதமருக்கு

உலகத் தலைவர்கள் அளித்த கௌரவம்

அணிசேரா நாடுகளின் தந்தையர்கள் இவர்கள் -

* பண்டிதர் ஜவஹர்லால் நேரு (இந்தியா)
* சுகர்ணோ (இந்தோனேஷியா)
* ஜோசப் ப்ரொஸ் மாஷல் டிட்டோ (யூகோஸ்லேவியா)
* ஜமால் அப்துல் நாஸர் (எகிப்து)
* க்வாமே என்குருமா (கானா)

“ஐவர் சேர்ந்து கட்டிய உலகக் கோட்டை” என்று இந்த அணியை உலகத் தலைவர்கள் வர்ணித்தனர்.
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலர்ந்த பொதுமக்கள் யுகத்தின் தந்தை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க இலங்கை நாட்டையும் பிறகு இவ்வணியுடன் இணைத்துச் செயற்படலானார்.
உலகில் வாழும் மக்களுள் ஐம்பத்தைந்து சதவீதத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணி இது. ஆகவே, உலகில் முதல் இடம் வகிக்கும் பேரியக்கம் இது.
ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) இவ்வணியில் பிரதிநிதித்துவப்படுத்தப் படுகின்றது.
அபிவிருத்தி அடையும் அல்லது மூன்றாம் உலக நாடுகளுள் ஒரு பகுதியினர் இதில் அங்கத்துவம் பெறுகின்றனர்.
அணிசேரா நாடுகளின் முதல் மகாநாடு 1961 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் யூகோஸ்லேவியாவின் பெல்கிரேட் தலைநகரில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (இதுவரை நடந்தேறிய பதினைந்து (15) மாநாடுகளின் விபரங்கள் இங்கே பிறிதொரு இடத்தில் பிரசுரிக்கப்பட் டுள்ளது.)
இவ்வரிசை யில் ஐந்தாவது மகாநாடு எமது சொந்த மண்ணில் கொழும்பு நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது. புத்தெழுச்சி பெற்ற ஒரு மகாநாடாக அணிசேரா நாடுகளின் ஏனைய தலைவர்கள் இதனை வர்ணித்தனர்.
உலகில் முதல் பெண் பிரதமர் : ஸ்ரீமாவோ
இப்பெருமையை இலங்கை அடைவதற்கு முத்தாய்ப்பு வைத்தவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள். உலகின் முதல் பெண் பிரதமர் என்பதனால் இவரின் மதிப்பு முன்றாவது நாடுகளில் மாத்திரமல்ல மேற்கத்தைய – வல்லரசு நாடுகளிலும் அதி சிறப்பாக மேலோங்கிப் பிரகாசித்தது.
உலகின் முதல் பெண் பிரதம அமைச்சரைக் காணவும், அவரோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏனைய உலகத் தலைவர்கள் மத்தியில் பேரார்வம் கூடிநின்றது. எனவே, இவரை நேரில் கண்டுகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் உலகத் தலைவர்கள் பலர் எமது மண்ணில் முதன் முதலாகக் கால்பதித்தனர்.
இதில் கியூபாவின் பிடல் காஸ்ரோ, லிபியாவின் முஹம்மர் அல் - கத்தாபி, யூகோஸ்லேவியாவின் டிட்டோ, அல்ஜீரியாவின் ஹுரி பூமிதீன், இந்தியாவின் இந்திரா காந்தி, கானாவின் என் குர்மா, உகண்டாவின் இடிஅமீன், பஹ்ரைன் தேசத்தின் ஷேக் ஈஸா பின் கலீபா, ஸாம்பியாவின் கெனத் கவுண்டா, எகிப்தின் அன்வர் சாதாத், பலஸ்தீனத்தின் யாkர் அரபாத் போன்றவர்களை இங்கு முக்கியமாகக் குறிப்பிடலாம்.
உலக நாட்டுத் தலைவர்கள் இவ்வளவு தொகையினர் இலங்கை விஜயம் செய்தது இதுவே முதற்தடவை. இது எமது நாட்டு வரலாறு குறித்து வைத்துள்ள ஒரு சிறப்பம்சம் எனலாம்.
கொழும்பு மாநகர் மணி விழா பூண்டு மின்னொளி வீசியது
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் இந்த ஐந்தாவது அணிசேரா மாநாட்டை அரங்கேற்றுவதற் கென்றே நிர்மாணிக்கப் பட்டது.
ஒரு வண்ண மாளிகை - பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம்!
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோளை ஏற்று சீன அரசாங்கம் சீன கட்டடக் கலைக்கேற்ப இம் மண்டபத்தைக் அழகுறக் கட்டியெழுப்பியது. கொழும்பு மாநகர் அதுவரை கண்டிராத ஒரு கவர்ச்சியைக் கண்டு பூரித்து நின்றது. பார்த்து மகிழத்தக்க ஒரு கட்டடம் இது என வந்த அத்தனை தலைவர்களும் விதந்துரைத்தனர்.
இம் மணி மண்டபத்தைக் கண்டுகளிப்பதற்கென்றே ஆயிரமாயிரமாய் ஏன் இலட்சக் கணக்கான பொதுமக்களும் பாடசாலைச் சிறுவர்களும் உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டு இன்றுவரையில் இவ்வண்ண மாளிகையைக் கண்டுகளிக்க கொழும்பு வந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் வனப்புக்கு மேலும் அணிசேர்க்கும் வகையில் பல புதிய அபிவிருத்திப் பணிகளும் இம் மகாநாட்டை யொட்டி விறுவிறுவென மேற்கொள்ளப் பட்டன. கட்டுநாயக்க விமானத் தளம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமாகப் பெயர் சூட்டப்பட்டது. கனேடிய அரசின் உதவியோடு இலங்கை - கனேடிய நட்புறவு ரஸ்தா அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கொழும்பு - கட்டுநாயக்க பிரதான வீதி விஸ்தரிக்கப்பட்டு, இன்று காண்பது போன்று, பாரிய இரு ஓடுபாதைகளாக னீoublலீ ழிanலீ மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் உருவாகின. கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள அக்லண்ட் ஹவுஸ் – விசும்பாய என பெயர்மாற்றம் பெற்று இலங்கை விஜயம் செய்யும் உலக நாட்டுத் தலைவர்கள் தங்குமிடமாகத் தரமுயர்த்தப்ப ட்டது. இங்குதான் முதன் முதலாக லிபிய நாட்டுத் தலைவர் முஅம்மர் அல் - கத்தாபி தங்கியிருந்தார் என்பது குறித்துத் சொல்லக்கூடிய அம்சமாகும். கொழும்பு வீதிகளெ ல்லாம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வீதிகளின் இருமருங்குகளிலும் பூஞ்செடிகளும், ஏனைய தாவர விருட்சங்களும் நடப்பட்டு தலைநகர் விழாக்கோலம் பூண்டு நின்றது.
1976 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்தேறிய இந்த மாநாட்டின் போதுதான் உலகின் முதல் பெண் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் அணிசேரா நாடுகளின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1955 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட அணிசேரா நாடுகளின் எண்ணிக்கை இப்போது 118 ஆக பல்கிப் பெருகியுள்ளது. வேறு 15 நாடுகள் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. 1979 ஆம் ஆண்டு கியூபாவின் தலைநகர் ஹவானாவில்தான் இதன் சட்ட வடிவம் உருவாக்கப்பட்டது.
வல்லரசு பேராதிக்கம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம், சகல வித வெளிநாட்டுத் தலையீடு, நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு ஊடுருவல், வல்லரசு நாடுகளின் வெறி, அதிகார அரசியல் வெறி ‘@!}சி(ரி8வீlழி எதிராக எழுந்து நிற்கக்கூடிய ஒரு பலம்மிக்க விரோத சக்தியாக விளங்க வேண்டும் என்ற குறிக்கோளுடனையே இந்த அணிசேரா நாட்டுப் பேரணி தோற்றுவிக்கப்பட்டது...

இதுவரை அணிசேரா மகாநாடுகள் நடைபெற்ற நாடுகளும் திகதிகளும்:

* யூகோஸ்லாவியா (தலைநகர் பெல்கிரேட் – 1-6-1961)
* எகிப்து (தலைநகர் கைரோ - அக்டோபர் 5-10-1964)
* ஸாம்பியா (தலைநகர் லுஸாக்கா - செப்டெம்பர் 8-10,1970)
* அல்ஜீரியா (தலைநகர் அல்-ஜியர்ஸ் - செப்டெம்பர் 5-9,1973)
* இலங்கை (தலைநகர் கொழும்பு - ஆகஸ்ட் 16-19,1976)
* கியூபா (தலைநகர் ஹவானா - செப்டெம்பர் 3-9,1979)
* இந்தியா (தலைநகர் டில்லி – மார்ச் 1-12,1983)
* உகண்டா (தலைநகர் ஹராரே - செப்டெம்பர் 1-6,1986)
* யூகோஸ்லேவியா (தலைநகர் பெல்கிரேட் இரண்டாவது தடவை - செப்டெம்பர் 4-7-1989)
* இந்தோனேஷியா (தலைநகர் ஜகர்த்தா - செப்டெம்பர் 1-7,1992)
* கார்த்திகேனா டி இந்தியாஸ் (ஒக்டோபர் 18-20,1995)
* தென்ஆபிரிக்கா (தலைநகர் டேர்பர்ன் - செப்டெம்பர் 2-3,1998)
* மலேசியா (தலைநகர் கோலாலம்பூர் - பெப்ரவரி 20-25,2003)
* கியூபா (தலைநகர் ஹவானா - செப்டெம்பர் 15-16,2006)
* எகிப்து (ஷாம் அல்-ஷெய்க் பாலைலா நகர் - ஜுலை 11-16,2009)
குறிப்பு : அடுத்த மகாநாடு ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் 2012 ம் ஆண்டு நடைபெறும் என எகிப்தில் சென்ற மாதம் நடைபெற்ற மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...